அன்பு தணிந்து போகாமல் மன உறுதியுடன் இருந்து மீட்பு பெறுவோம். மத்தேயு 24:12.

ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் கடைசி காலத்தின் செயல் பாடுகளை நமக்கு அறிவிக்கும் பொழுது இவைகளை சொன்னார். ஆண்டவரின் வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன? என்று கேட்ட தமது சீடர்களிடம் இயேசு கூறியது,நெறிதவறி செய்யாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். நானே மெசியா என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர். போர் முழக்கங்களையும், போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இவை நடக்கும்,முடிவாகா,

நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும், நில நடுக்கங்களும் ஏற்படும். இவை அனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே உங்களை துன்புறுத்தி கொல்வதற்கென ஒப்புவிப்பார். இயேசுவின் பெயரை பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பார். அப்பொழுது பலரின் நம்பிக்கை இழந்து விடும். ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பர். ஒருவரை ஒருவர் வெறுப்பர். பல போலி இறைவாக்கினர் தோன்றி பலரை நெறிதவறி அலையச் செய்வர். நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்து போகும். ஆனால் இறுதிவரை மன உறுதியோடு இருப்பவரே மீட்பு பெறுவார் என்று மத்தேயு 24:4 to 13 வரை உள்ள வசனங்கள் நமக்கு சொல்கிறது.

ஆண்டவரின் வார்த்தைப்படியே இப்பொழுது அநேகருடைய அன்பு தணிந்து போய்தான் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும், எத்தனை பிரிவினைகள், சண்டைகள் அதிகமாக நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இவைகள் எல்லாம் ஆண்டவரின் வாக்குப்படி நடந்துக்கொண்டு
இருப்பதால் நாம் அதிக ஜாக்கிரதையோடு நடந்துக்கொண்டு விழிப்பாயிருந்து, ஜெபத்திலே தரித்திருந்து ஆண்டவரின் வருகைக்கு  ஆயத்தம் ஆகலாமே!

அன்பின் ஊற்றாம் இறைவா!

உமது கிருபையால் நிலைநிற்கிறோம். நாங்கள் அழிந்து போகாதபடிக்கு எங்களை காத்து வருபவரே உமக்கு கோடி நன்றி செலுத்துகிறோம். உமது வருகை மட்டும் உறுதியோடு இருந்து உமது மீட்பிலே பங்கு கொள்ளும்படி செய்தருளும். எங்களின் அன்பு தணிந்து போகாமல் இருக்க உதவிச் செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே! ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: