அற்புதக் குழந்தை இயேசுவின் நாவல் செபங்கள் திருப்பலியில் ஜெபிகும் விதம்

மறையுரைக்குப்பின்: அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தர்கள் வேண்டுதல்கள்
குருவானவர்:வணகத்தந்தையே! எங்களுக்கு வேண்டியது எல்லாம் உம் மகன் அற்புதக் குழந்தை இயேசு, தம்முடைய பெயராலே அவரை நம்பிக்கையோடு கேட்குமாறு அவரே எங்களுக்கு கற்றும்
கொடுத்துள்ளார்.எனவே அதே நம்பிக்கையோடு அவரை நாடி வந்திருக்கும் பக்தர்களின் வேண்டுதல்களை கேட்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
(1)அகில உலக கத்தோலிக்க மக்களை வழிநடத்தும் எம் திருத்தந்தை,ஆயர்கள்,குறிப்பாக எம்மறை
மாவட்டதிதில் பணிபுரியும் அணைத்து அருட்பணியளர்கள்,துறவியர்,வேதியர் மற்றும் நற்செய்தி
பணியாளர்களை நீர் நிறைவாக ஆசிர்வதித்து எதிர்ப்புகள் இன்னல் இடையுருகள் மத்தியிலும் உம்
பணிகளை துணிவுடன் தொடர, அற்புத்தக் குழந்தை எயேசுவே உம்மை வேண்டுகிறோம்.
எல் :அற்புதக் குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டத்தை கேட்டருளும்.
(2)நமது இந்திய நாட்டை ஆளும் அனைவரும் நாட்டு மற்றும் மக்கள் நலனையே மையமாக கொண்டு,சுயநலம் தவிர்த்து,மக்கள் முன்னேற்றத்துக்காக பொருளாதார மற்றும் ஆன்மீக நலனை முன்நிறுத்தி அயராது உழைக்க வரமருள அற்புதக் குழந்தை இயேசுவே உம்மை வேண்டுகிறோம்.
எல் : அற்புதக் குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
(3)இன்று குறிப்பாக அவரை நம்பிக்கையோடு நாடி வந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்காக வேண்டுவோம்.மனவேதனையாலும்,திராத உடல் நோயாலும் குடும்பப் பிரட்சனைகள் பல ஆண்டுகளாக திருமணம் நடைபெறாத நிலை மணமுடித்தும் குழந்தை பாக்கியம் இல்லாத வேதனை
நல்லதொரு வேலை வாய்ப்பு கிடைக்காத விரக்தி சொந்தவீடு கட்ட முயற்சித்தும்,முடியாத வேதனை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் நல்ல முடிவு கிடைக்கப் பெறாத தீர்ப்புகள்,பிள்ளைகளின்
எதிர்காலம்,ஓர் கேள்விக்குறி என வேதனையோடு வந்திருப்பவர்களின் மனக்கஷ்டங்கள் மனபாரங்கள் விலகி மனநிறைவோடும் வாழ வரமருள அற்புதக் குழந்தை இயேசுவே உம்மை
வேண்டுகிறோம்.
எல் :அற்புதக் குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டத்தை கேட்டருளும்
(4 )அனைத்து நோய்களுக்கும் காரணம்,எங்கள் உள்ளத்தில் நாங்கள் வளர்த்து கொள்ளும் பகை
வர்மம்,வைராக்கியம் விட்டுக் கொடுக்காத நிலை பழி வாங்கும் எண்ணம்,புரிந்து கொள்ளாத நிலை
என்பதை உணருகிறோம்.இவற்றிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விலகி வாழ வேண்டுமென்று அற்புதக் குழந்தை எயேசுவே உம்மை வேண்டுகிறோம்.
எல் : அற்புதக் குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
(5 )அற்புதக் குழந்தை இயேசுவே! உம்மீது ஆழ்ந்த பக்தி கொண்டு வாழ்ந்து உம்பாதம் வந்தடைந்திருக்கும் எம் பங்கில் குடும்பங்களின் மரித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,
அவர்கள் பாவங்களுக்காக உத்தரிப்புக் கடனை விரைவில் தீர்த்து ,உம் அன்பு முகத்தை காணும் அந்த
பேற்றினை அவர்களுக்கு அருளவேண்டுமென்று அற்புதக் குழந்தை இயேசுவே உம்மை வேண்டுகிறோம்.
எல் : அற்புதக் குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
குரு :இங்கிருக்கும் நாம் அனைவரும் நம்முடைய தனிப்பட்ட குடும்பத்தின் பல்வேறு தேவைகளுக்காக சற்று நேரம் கண்களை மூடி மவ்னமாக நம்பிக்கையோடு செபிப்போம்.
குரு :செபிப்போமாக :அன்புத் தந்தையே !உம்திருமகன் அற்புதக் குழந்தை இயேசு வழியாக எங்கள்
வேண்டுதல்கள் எல்லாம் கேட்கப்படும் என்ற நன்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. இருப்பினும்
எங்களுடைய தேவைகளை யெல்லாம் நீரே நன்கு அறிந்துருப்ப்பதால் அவற்றையெல்லாம் உம்
அன்பு மகன் வழியாக நீர் நிறைவேற்றி உமது அருள்புரியுமாறு அதே அற்புதக் குழந்தை இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல் :ஆமென்
நற்கருணை விருந்து நன்றி செபத்திற்கு பிறகு சிறப்பு நவநாள் செபங்கள் செபிக்கப்படும்.
பாடற்குழுவின் பாடல் :

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: