ஆண்டவரின் அன்பிலே நிலைத்திருப்போம்.[யோவான் 15:9]

அன்பானவர்களே!ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நமக்கு ஆண்டவர் நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புக்கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை என்று சொல்கிறார். நாம் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடந்தோமானால் அவரின் அன்பிலே நிலைத்திருப்போம். ஏனெனில் உண்மையான திராட்சைக்கொடி அவரே. நாம் யாவரும் அதன் கிளைகள் ஆவோம். நாம் அவரோடு இணைந்து செயல்பட்டால் நாமும் மிகுந்த கனிகளை கொடுப்பவர்களாய் மாறுவோம்.

நாம் அவர் கட்டளை இடுவதையெல்லாம் செய்தால் நம்முடைய நண்பராய் இருப்பார். நண்பர்களுக்குள் எந்த ஒளிவும், மறைவும் இருக்காதே. அவர்கள் தங்கள் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்வார்கள். ஆண்டவரும் அதேபோல் நம்முடைய நண்பராய் இருந்து அவருடைய எல்லா விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்வார். அப்பொழுது நாமும் மிகுந்த கனியை கொடுக்கும்படி வாழலாம்.

நாம் ஆண்டவருக்குள்ளும்,அவருடைய வார்த்தைகள் நம்முடைய இருதயத்துக்குள்ளும் நிலைத்திருந்தால் நாம் விரும்பி கேட்கும் அத்தனை காரியங்களையும் நமக்கு கட்டளையிடுவார். நாம் கேட்காதவற்றையும் கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். தேவைகள் யாவையும் சந்திப்பார். உயிரையே கொடுத்த ஆண்டவர் மற்றவற்றையும் கொடுக்காமல் இருப்பாரோ!

ஜெபம்

அன்பின் தெய்வமே!நாங்கள் உம்மில் நிலைத்திருக்க, நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்கும் நல்ல திராட்சைக் கொடியாக மாற்றும். உமது அன்பே மாறாதது.நாங்கள் உமது அடிச்சுவட்டை எல்லாவற்றிலும் பின்பற்ற பேருதவி எங்களுக்கு அளித்தருளும். நீரே எங்கள் உற்ற நண்பராய் இருந்து எல்லாவற்றிலும் ஆசீர் வாதத்தை கட்டளை இடுவதற்காய் உமக்கு கோடி நன்றி அப்பா. உம்முடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் தந்தையே ஆமென்!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: