ஆண்டவர் தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். யோவான் 13:1

இந்த உலகில் வந்து பிறந்த,பிறக்கின்ற ஒவ்வொருவர் மேலும் கடவுள் இறுதிவரை அன்பு செலுத்தி நம்மை வழிநடத்துகிறார். மனிதர்களின் அன்பு மாறிவிடும். ஆனால் ஆண்டவரின் அன்பு ஒருபோதும் மாறாது. நமக்கு சில கஷ்டங்கள் ஏற்படும்போது கடவுள் ஏன்தான் இப்படி செய்கிராறோ என்று மனம் பதறி குறை சொல்லி விடுவோம். ஆனால் அந்த சில கஷ்டங்களை நாம் சந்திப்பதால் நமக்கு பல அனுபவங்கள் ஏற்படும். அதன்மூலம் நாம் நிறைய காரியங்களை கத்துக் கொள்ள ஆண்டவர் உதவுவார். நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால்,இப்போது உமது வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன் என்று தாவீது சொல்வதுபோல் நாமும் சொல்லலாமே! தி.பாடல்கள்.119:67.

ஆண்டவர், தண்ணீரை வானத்தில் தோன்றும் கார்மேகத்தில் கட்டி வைத்து பின்பு அதன்மேல் காற்றை வீசச் செய்து அதை பூமியெங்கும் மழையாக பொழியச் செய்து பூமியை நனைத்து குளிர வைக்கிறார். அந்தத் தண்ணீரை கார்மேகங்கள் சுமப்பததால் அவைகள் சோர்ந்து விடுவதில்லையே? அப்படித்தான் நமக்கு ஏற்படும் பல இன்னல்களால் நாம் சோர்ந்துபோய் தளர்ந்து போகாமல் இருப்போமானால் தென்றல் காற்றை நம்முடைய இதயத்தில் வீசச் செய்து பல இக்கட்டுகளில் இருந்தும் மீட்டு தண்ணீர் எப்படி பூமியை நனைத்து குளிரப்பண்ணியதோ, அதுபோல் நம்முடைய இதயத்தில் ஏற்படும் எல்லா சோர்விலிருந்தும் விலக்கி காத்து குளிரச் செய்து மகிழச் செய்வார்.

ஏனெனில் அவர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ளது. அவரின் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அவரவர் அருகில் உள்ளார். ஆகையால் அவருக்கு அஞ்சி நடந்தோமானால் நம்முடைய விருப்பத்தை ஏற்று செவிசாய்த்து அவை யாவையும் நிறைவேற்றுவார். அவரிடம் அன்புக்கொள்ளும் யாவரையும் பாதுகாக்கின்றார். இறுதிவரை அன்பு செலுத்துகின்றார்.அதற்காகவே இந்த பூமியில் இறங்கி வந்தார்.

இறுதிவரை அன்பு செலுத்தும் இறைவா!!

உம்மை போற்றுகிறோம்,வணங்குகிறோம்.நீர் எல்லா நேரங்களிலும் எங்கள்மேல் அன்பு வைத்து வழிநடத்துகிறீர். வானம், பூமி ஒழிந்து போனாலும் நீர் சொன்ன வார்த்தை மாறாது. நீர் சொன்னபடியே எங்கள் பாவங்களையும், அக்கிரமங்களையும் மன்னித்து நாங்கள் பாவிகளாய் இருந்தபோதும் நீர் எங்கள்மேல் இறுதிவரை அன்பு வைத்து காத்து ஆசீர்வதித்து வருகிறீர். உமக்கு கோடான கோடி நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம் உமது அன்பு சகல பாவங்களையும் மூடி காத்துக்கொண்டதற்காய் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் நாங்களும் உமது அன்பை இந்த பூமியில் நிலைநாட்ட எங்ளுக்கு இரங்க வேண்டுமாய் கெஞ்சி மன்றாடுகிறோம் எங்கள்
ஜீவனுள்ள பரம தகப்பனே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: