ஆழமாக வாசி

(யோவான் 5:1-3, 5-16)

மற்ற புதுமைகள் அல்லது அருளடையாளங்கள் அனைத்திலிருந்தும் இன்றைய நற்செய்தியில் நடக்கின்ற அருளடையாளங்கள் மிகவும் வித்தியாசமாகத் தனித்துவம் பெற்று இருக்கிறது. இந்த வித்தியாசத்திற்கும் தனித்துவத்திற்கும் பெயர் போனதே இந்த யோவான் நற்செய்தி. மேலோட்டமாக வாசிக்கிறவர்களுக்கு ஒரு செய்தியையும், ஆற அமர ஆழமாக வாசிப்பவர்களுக்கு இன்னொரு இனிமையான செய்தியையும் கொடுப்பதே யோவான் நற்செய்தியாளரின் கைவண்ணம். அவரது கைவண்ணத்தை இன்றைய நற்செய்தியில் கூடுதலாகவே காணலாம்.

இந்த 38 ஆண்டுகள் நோயுற்றவர் குணமாதலின் நிகழ்வினை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள். இங்கே 5 மண்பாண்டங்களைக் கொண்ட கட்டடம், 5 புத்தகங்களைக் கொண்ட ‘தோரா’ – வினைக் குறிக்கிறது. 38 ஆண்டுகள் நோயுற்றவன் என்பது இஸ்ரயேல் மக்கள் 38 ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்ததைச் சுட்டுகிறது. (இச 2:14) குணம் பெற்றவன் இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது.; கலங்கிக் கண்ணீரோடு குணப்படுத்துவது, பலவிமான தெய்வங்களிடம் அலைந்து திரிந்து, கலங்கிய கண்ணீரோடு இருப்பவர்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டு திருமுழுக்குப் பெற்றால் நிலை வாழ்வினைப் பெறுவது திண்ணம் என்பதைக் குறிக்கிறது. மொத்தத்தில் இயேசுவே வந்து “நீர் நலம் பெற விரும்புகிறீரா?” என்று கேட்பது அவரே நம் அனைவரையும் அழிந்து போகாமல் மீட்டெடுக்க இவ்வுலகத்தில் மனிதனாகப் பிறந்ததைக் குறிக்கிறது.

அவரின் மீட்புத் திட்டத்திற்கு நாமும் அந்த நோயாளரைப் போல விருப்பம் தெரிவிப்போம். அவரில் இணைவோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: