ஆவியால் பேருவகை !

லூக்கா 10: 17-24

இயேசுவின் செபம் நமக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவும், ஊக்க மருந்தாகவும் அமைகிறது. அவரது செபத்தைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

1. இயேசுவின் செபம் துhய ஆவியால் துhண்டப்பட்டதாக அமைந்தது, ஆவியின் துணையால்தான் நான் இறைவனை அப்பா, தந்தாய் என்று அழைக்கிறோம் என்று பவுலடியாரும் கூறியுள்ளார். ஆவியானவரே நாம் செபிப்பதற்குத் துhண்டுகோலாகவும், துணையாளராகவும் விளங்குகிறார். கோவிலில் நமது வழிபாடுகள் துhய ஆவியின் துணை வேண்டி தொடங்குவதை நினைவுகூர்வோம். எனவே, இயேசுவைப் போல நாமும் துhய ஆவியில் நிறைந்து செபத்தில் ஈடுபடுவோம்.

2. இயேசு பேருவகையுடன் செபித்தார். எங்கே துhய ஆவி இருக்கிறாரோ, அங்கே மகிழ்ச்சி உண்டு. மகிழ்ச்சி என்பது ஆவியின் ஏழு கனிகளுள் ஒன்று அல்லவா. எனவே, ஆவியால் நிறையும்போது அங்கே நிச்சயம் மகிழ்ச்சி உண்டு. மேலும், செபம் என்பதுவும் ஒரு மகிழ்ச்சியின் அனுபவமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் செபிக்கும்போது, மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் அடையவேண்டும் என்று இயேசுவின் செபம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

3. இயேசு தம் செபத்தில் தந்தையைப் போற்றுகிறார். ஆம், செபங்களில் இனிமையானதும், சிறப்பிடம் பெறுவதுமானது இறைபுகழ்ச்சி செபம்தான். இயேசு தந்தையின் ஞானத்தை, அவரது திருவுளத்தைப் போற்றிப் புகழ்கிறார். நாமும் நம்முடைய செபத்தில் தந்தை இறைவனுக்குப் புகழும், மாட்சியும் செலுத்த இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்:
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திற்காக, உம் அன்புத் திருமகன் இயேசுவுக்காக, அவர் எவ்வாறு செபிப்பது என்று எங்களுக்குக் கற்றுத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். தந்தையே, நாங்கள் எப்போதும் துhய ஆவியில் நிறைந்து, செபித்து, மகிழ்ச்சி அடைய எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: