“இதோ! என் தாயும் என் சகோதரர்களும்”

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாரும் யாருக்கும் தாயாகவோ, சகோதர சகோதரியாகவோ மாற முடியாது.நீங்களோ நானோ, அதுவும் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரியாக உறவு கொண்டாட நினைப்பது கனவிலும் நம்மால் நினைக்கமுடியாத ஒன்று.ஆனால் இது எல்லோராலும் எட்டிப் பிடிக்கும் ஒன்றாக, இனிய எளிய ஒன்றாக இயேசுவே முன்வந்து நமக்கு மாற்றியுள்ளார்.

நம் அன்னை மரியாள் இயேசுவின் தாயாக எவ்வளவோ தன்னை தயாரிக்க வேண்டியிருந்தது. தன்னை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. தன்னை இழக்;க வேண்டியிருந்தது. ஆனால் இந்த பாதையை இயேசு நமக்கு மிக எளிதாக்கியிருக்கிறார். “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”(மாற்3:35) என்ற எளிய பாதை அமைத்து இலக்கை எளிதாக்கியுள்ளார்.

“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்ற இவ்வர்ப்பணத்தைத் தன் வாழ்வாக்கி இயேசுவின் தாயாக அன்னை மரியாள் எவ்வளவோ சிறமப்பட்டு நமக்கு முதல்பாதை அமைத்தார். “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்”. ஆழ்ந்த தியானத்தில் இறைவனின் திருவுளத்திற்கு ஒன்றித்த நிலையில் நமக்கு முன் உதாரணம் அமைத்தார். தன் துன்பங்கள் குடும்ப பாரங்கள் அனைத்தையும் இறை திருவுளம் என ஏற்று, இயேசுவைப் பெற்றெடுத்ததைவிட, திருவுளம் நிறைவேற்றியதால் கடவுளின் தாயானாள். நாமும் இவ்வாறு வாழ்ந்தால் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறமுடியும். இவ் உறவைப் பெற்று இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

~ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: