இயேசுவின் நற்செய்தி தரும் படிப்பினை

யோவான் நற்செய்தியாளரின் முக்கியமான கவலைகளில் ஒன்று, இயேசுவை ஒருசிலரே நம்புகிறார்கள் என்பது. ஒரு சிலரே இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும், அவரது கவலையாக இருந்தது. ஆனால், இயேசுவை நம்புகிறவர்கள், உடனே அவரது வார்த்தையையும் நம்புகிறவர்களாக இருந்தது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

முற்காலத்தில் ஒரு ஆவணத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அந்த ஆவணத்தின் கீழே, தான் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தனது அச்சைப் பதிப்பார். அந்த அச்சு, ஒருவர் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இருந்தது. அந்த அச்சு தான், அந்த ஒப்பந்ததத்திற்கு, குறிப்பிட்ட நபர் கட்டுப்பட்டவர் என்பதை அறிவிப்பதாக இருந்தது. அதேபோல, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள், அவரையும், அவரது வாழ்வையும், தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.

இன்றைக்கு நாம் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களாக இருந்தால், அவரையும், அவர் நமக்கு காட்டுகிற, அறிவுறுத்துகிற வாழ்வையும் ஏற்றுக்கொள்வதாகத்தான் அர்த்தமாக இருக்கும். அத்தகைய ஒரு வாழ்வை நாம் நேர்மறையான எண்ணத்தோடு வாழ, இறையருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: