இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். 2 திமொத்தேயு 3 : 12

உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிக்கொண்டுவிட்டேன்” என்றார்.என்று இயேசுவே யோவான் 16:33 ல் சொல்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகை வென்றதால் அவருடைய பிள்ளைகளாகிய நம்மையும் அவரின் துணையோடு  வெற்றிக்கானும்படி செய்வார். அவர் வழியாய் நாம் அமைதியை பெற்றுக் கொள்ளலாம்.

கிறிஸ்துவ வாழ்க்கை என்பது பஞ்சு மெத்தை வாழ்க்கை இல்லை. நிறைய துன்பங்களும், தொல்லைகளும் நம்மை சூழ்ந்துக்கொண்டு பயமுறுத்தும். ஆனால் அவற்றைக் கண்டு மனம் சோர்ந்து போகாமல் உண்மையாய் விசுவாசத்துடன் நடந்துக்கொண்டால் ஆண்டவர் நமக்கு உதவிச்செய்வார். மன உறுதியையும்,ஊக்கத்தையும் தரும் கடவுள் நமக்கு அருள்புரிவாராக!

நமக்கு ஏற்படும் துன்பங்களை கடவுளுக்கு ஏற்புடைய முறையில் தாங்கிக் கொண்டால் அதினால் நமக்கு எத்தனை அதிகமான ஊக்கம் உண்டானது என்று உணரலாம். அதற்கு உதாரணமாக யோபுவின் புத்தகத்தை வாசித்துப்பார்த்தால் நன்கு விளங்கும். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் தன் உடல் முழுதும் நோயினால் தாக்கப்பட்டப்போதும் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொண்டு அவர் என்னைக்கொன்று போட்டாலும் அவர் மேல் பிரியமாய் இருப்பேன் என்று சொன்ன அவரை ஆண்டவர் கொன்று போட்டாரா? இல்லையே முன்புவிட எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை கொடுத்து காத்து உயர்த்தினார்.அந்த யோபுவைப்போல நாமும் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம். நம்மை சொதித்தப்பின் பொன்னாக விளங்குவோம்.

இயேசுவும் அந்த பாதையில் கடந்து சென்றதால் நமக்கு உதவி செய்ய நல்லவரும், வல்லவருமாய் இருக்கிறார். ஆகையால் என்ன கஷ்டங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் மன உறுதியோடு வாழ்ந்து ஆண்டவருக்கே துதி,கனம் மகிமையை ஏறெடுப்போம்.

அன்பே உருவான இறைவா!

பச்சை மரமான உமக்கே எத்தனையோ பாடுகள் என்றால் பட்டுப்போன மரமாகிய எங்களுக்கு எவ்வளவோ பாடுகள். ஆனாலும் நீர் இந்த உலகத்தை வென்றததுப் போல நாங்களும் உமது கிருபையோடும், துணையோடும் வெல்வதற்கு துணைபுரியும். அதற்காகவே நீர் இந்த உலகில் வந்து முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தீர்.ஆகையால் உமக்கு பிரியமாய் வாழும் வாழ்க்கையில் எத்துனை கஷ்டங்கள் வந்தாலும் மன உறுதியோடு வாழ்ந்து நீர் வெற்றிக்கண்டது போல நாங்களும் வெற்றிக் காண உதவி செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல தந்தையே! ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: