இறையாட்சி உங்கள் நடுவேயே !

மன மகிழ்ச்சியை வெளியே தேட முடியாது. அது அகத்தின் உள்ளேதான் இருக்கிறது. அதுபோல, இறையாட்சியும் மானிட வாழ்வுக்கு வெளியே இல்லை. நமது நடுவிலேயே இருக்கிறது என்னும் ஆண்டவரி;ன அமுத மொழிகள் இன்று நமக்கு வாழ்வு தரும் வார்த்தைகளாக வழங்கப்படுகின்றன. இன்று பலரும் தங்கள் தேடுதலை வெளியே வைத்திருக்கிறார்கள். சிலர் அற்புதங்களைத் தேடி நற்செய்திக் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் புதமைகளைத் தேடி திருத்தலங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியைத் தேடித் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், தங்களுக்குள்ளேயே தேடினால், அமைதியும், நீதியும், மகிழ்ச்சியும் தங்களின் வாழ்விலும், பணியிலுமே அடங்கியிருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம். இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது என்கிறார் ஆண்டவர். இறையாட்சியி;;ன் அடையாளங்களைக் கண்டுகொள்ளலாம். எங்கெல்லாம் சமத்துவம் இருக்கிறதோ, எங்கெல்லாம் மனிதர்கள் மன்னிப்பை அனுபவிக்கிறார்களோ, எங்கெல்லாம் பொருள்களைவிட மனிதர்கள் பெரிதாக மதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் இறைவனின் விழுமிங்கள் போற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் இறையாட்சி புலர்ந்துவிட்டது என்றுதானே பொருள். எனவே, இறையாட்சியை நாம் வெளியே தேடவும் வேண்டாம். இறையாட்சிக்குரிய பண்புகளைப் பிறரிடமும் எதிர்பார்க்க வேண்டாம். நமது வாழ்விலேயே இறையாட்சிப் பண்புகளை நாம் கடைப்பிடித்து, நம்மைக் காண்பவர்கள் இறையாட்சி இங்கேயே இருக்கிறது என்று கண்டுகொள்ளும் வண்ணம் வாழ்வோமாக,

மன்றாடுவோம்: வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். உமது அரசு வருக என்று வேண்டுகிறோம். உமது அரசாட்சியி;ன் கூறுகளை எங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க அருள்தாரும். உமது ஆசிகளை நாங்கள் வெளியே தேடாமல், எங்கள் வாழ்விலும், பணியிலுமே கண்டுகொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

— அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: