இறைவனின் இரக்கம்

இயேசுவை மெசியாவாக பார்த்தவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் நிச்சயம் அதிர்ச்சியையும், வியப்பையும் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், மெசியாவின் காலம் பொற்காலமாகக் கருதப்படும் என்றும், மெசியா மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்றும் மக்கள் நம்பினர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளையுமே நிறைவேற்றுவதாக தெரியவில்லை.

தீ என்பது தீர்ப்பைக்குறிக்கக்கூடிய உருவகம். இயேசு மனுமகன் மீண்டும் வரும்நாளை தீர்ப்பு நாளாகக்கருதுகிறார். மெசியா வரும்போது இஸ்ரயேல் மக்களைத்தவிர அனைத்து மக்களையும் தீர்ப்புக்குள்ளாக்குவார் என்று யூதர்கள் நினைத்தனர். யூத குலத்திலே பிறந்தாலே மீட்பு உறுதியாகிவிட்டதாக அவர்கள் நம்பினர். யூத குலத்தில் பிறந்தாலே தங்களுக்கு கடவுளின் மன்னிப்பு கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவர்களிடையே ஆழமானதாக இருந்தது. எனவே தான் அவர்கள் தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், கடவுளின் உரிமைச்சொத்தாகவும் தங்களைக்கருதினர். ஆனால், இயேசுவின் போதனை அவர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தைக்கொடுத்தது.

”நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு உகந்தவர்களாக முடியும்” என்று யாக்கோபு (2: 24) தன்னுடைய திருமுகத்திலே குறிப்பிடுகிறார். நமது வாழ்வு கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி அமைக்கப்படுகிறபோதுதான், நம்மால் கடவுளின் இரக்கத்தைப் பெற முடியும். இல்லையென்றால், எத்தனை வழிபாடுகளில் பங்கெடுத்தாலும், இறைஇரக்கத்தை நாம் பெறமுடியாது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: