இறைவனுக்கு பிரமாணிக்கமாய் இருப்போம்

திருச்சட்டத்தை கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்தார். மோசே இஸ்ரயேல் மக்களால் பெரிதும் மதிக்கக்கூடியவர். எனவே தான் மத்தேயு நற்செய்தியாளர், இயேசுவை புதிய மோசேயாக ஒப்பிட்டு, தனது நற்செய்தியை எழுதுகிறார். அதேபோல், பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தவராகவும் சித்தரிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் மதிக்கக்கூடிய மற்றுமொரு மிகப்பெரிய மனிதர் எலியா. இறைவரக்கினர்களுள் மிகச்சிறந்த இறைவாக்கினராக, இஸ்ராயேல் மக்களால் கருதப்படுகிறவர். இவர்கள் இருவரும் இயேசு தனது சாவை முதல்முறையாக முன்னறிவித்தவுடன், இயேசுவோடு உரையாடுகிறார்கள்.

இந்த இரண்டு பெரிய இறைவாக்கினர்களோடு தந்தையாம கடவுளும் பூரிப்படைகிறார். இந்த இரண்டுபேரும் இங்கே தோன்றுவது ஒரு சிறந்த பொருளை நமக்குத்தருகிறது. அதாவது, திருச்சட்டத்தையும், இறைவாக்கினர்கள் முன்னறிவித்ததையும் இயேசு நிறைவேற்றுகிறவராக விளங்குகிறார் என்பதுதான் அது, மோசே திருச்சட்டத்தையும், எலியா இறைவாக்கினரையும் இங்கே பிரதிபலிக்கிறார்கள். கடவுள் வெறுமனே வார்த்தைகளைச்சொல்கிறவர் அலல, மாறாக, தன்னுடைய வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறவர் என்பதையே இது காட்டுகிறது. நமது கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர்.

ஒவ்வொரு திருவருட்சாதனத்தின்போதும் இறைவனுக்கு வாக்குறுதி கொடுக்கிற நாம், உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? நம்முடைய வாழ்வு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. இத்தகைய இரட்டைவேட வாழ்விலிருந்து மாற்றம் பெற்ற வாழ்வு வாழ நாம் முயற்சி எடுப்போம். இறைவனுக்கு நாம் கொடுத்திருக்கிற வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: