இறைவன் அனைவருக்கும் தந்தை

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் இந்த எண்ணம் மற்றவர்களை ஏளனமாகப்பார்க்கக் காரணமாகியது. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்கிற எண்ணம் பரந்துபட்ட பார்வையில் நல்லதுதான். ஆனால், அத்தகைய எண்ணம் தான், இஸ்ரயேல் மக்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. தங்கள் வழியாக மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற பரந்துபட்ட எண்ணத்தைக்கொண்டிராமல், தங்கள் மூலம் இறைவன் மற்றவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

தொடக்கத்திலிருந்தே இறைவாக்கினர்கள் இந்த கருத்தை மெதுவாக மக்கள் மனதில் விதைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மக்கள்தான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு, அதனை மூடிவைத்திருந்தனர். நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் நற்செய்தியை எழுதினாலும், ஒட்டுமொத்தத்தில், இந்த உலகம் முழுவதிற்கும் ஆண்டவர்தான் அரசர் என்ற கருத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். ஆண்டவர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரையும் அன்பு செய்யக்கூடியவர். ஆண்டவரின் பார்வையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை. வேற்றுமையை அகற்றி, அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒற்றுமை உள்ளத்தை இன்றைய நற்செய்தி நமக்குக்கற்றுத்தருகிறது.

கடவுளை உள்ளத்தில் ஏந்துகிறவர்களுக்கு, எந்த வேற்றுமையும் இல்லை. அவர்கள் எப்போதும் அனைவரையும் சமமாக மதிப்பர். அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்வர். அவர்களுக்கு ஒவ்வொரு மனிதருமே கடவுளைத் தாங்கிக்கொண்டிருக்கக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களாக நாம் மாறுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: