எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் !

இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை இறைமகன் இயேசுவின் இரு வருகைகளைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது திருச்சபை.

முதல் வருகை மீட்பின் வருகை. வரலாற்றில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. அந்த வருகையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடவும், நன்றி கூறவும், மீட்பின் ஒளியில் வாழவும் அழைக்கப்படுகிறோம். இரண்டாம் வருகை தீர்ப்பின் வருகை. இனிமேல்தான் நடக்க இருக்கிற வருகை. அந்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கவும், ஆயத்தமாயிருக்கவும் நினைவூட்டப்படுகிறோம். இந்த நினைவூட்டலில் மூன்று தளங்கள் இருக்கின்றன:

1. எப்பொழுதும்: நம் ஒவ்வொருவரின் இறப்பும் நமக்கு இரண்டாம் வருகைதான். அது எந்த நேரத்திலும் நிகழலாம்.

2. விழிப்பாயிருந்து: எல்லா நேரமும் நமது சிந்தனையும், சொற்களும், செயல்களும் இறைவனுக்கேற்றதாக இருக்கும்படி கவனமாக வாழ்வது விழிப்புணர்வு.

3. மன்றாடுங்கள்: இந்த விழிப்புணர்வோடு சேர்ந்து செல்வது மன்றாட்டு. செபிக்கும்போதுதான் நாம் விழிப்பை அடைகிறோம். விழி;ப்பாயிருந்தால்தான் நாம் செபிக்கவும் முடியும். எனவே, விழிப்பும் செபமும் ;இணைந்தே செல்ல வேண்டும். தாய்;த் திருச்சபையின் இந்த நினைவூட்டல் அழைப்பை முழு மனதோடு ஏற்று, எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடுவோமாக!

மன்றாடுவோம்: எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாட அழைப்பு விடுத்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்கெல்லாம் எடுத்துக்;காட்டாக வாழ்வி;ன் அனைத்துச் சூழல்களிலும் நீர் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் விழிப்பாயிருந்தீர். அதற்காக எப்போதும் மன்றாடினீர். நாங்களும் உமது மாதிரியைப் பின்பற்றி, எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாட அருள் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: