ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம்..1 யோவான் 3:11

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துக்கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.

நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதினால் அல்ல. மாறாக அவர் நம்மீது அன்புக்கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்காக அவர் இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம்மை மீட்கும்படி இந்த உலகிற்கு அனுப்பி இரத்ததினால் நம்மை சம்பாதிக்கும்படி செய்து இவ்வாறு தமது அன்பை வெளிப்படுத்தினார்.

அன்பானவர்களே! கடவுள் இவ்வாறு நம்மீது அன்புக்கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்புக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார். அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அன்பின் ஊற்றே கடவுள்தான். அன்பு செலுத்துவோரே கடவுளுக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள்.

ஜெபம்

அன்பே உருவான இயேசுவே! உம்மைப்போல் மனதுருக்கத்தை தந்தருளும். உமது அன்பில் இருந்து எங்களை யாரும் பிரிக்காதபடி காத்துக்கொள்ளும். உமது அன்பு மாத்திரமே உயர்ந்தது, எல்லை அற்றது, நிபந்தனையற்றது. ஏனெனில் நீரே எங்களை தேடி வந்த தெய்வம். எங்களை  தேடி வந்து எங்களுக்காக உமது உயிரைக்கொடுத்து வாழ்வளித்த ஆண்டவர். நாங்களும் உமது அன்பிலே நிலைத்திருந்து உம்மைப்போலவே பிறரிடம் அன்பு செலுத்த கற்றுத்தந்தற்காய் உமக்கு கோடி நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே!ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: