கடற்கரை சகாய மாதா மன்றாட்டு ஜெபம்

கடற்கரை சகாய மாதா மன்றாட்டு ஜெபம்
அருள் மழை பொழியும் கடற்கரை சகாய தாயே
துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் தயை மிகு தாயே
இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம்
உமது வல்லமையுள்ள மன்றாட்டினால் எங்களை காத்தருளும
 நாங்கள் எவ்வித தவறிலும்/ கேட்டிலும்/ விழாதபடி
எங்களைக் கரம்பிடித்து/ வழி நடத்தும் தாயே
அன்று இந்த ஆலயத்தையும்
இப்பகுதியையும்
காப்பாற்ற வேண்டி
நீர் வீற்றிருந்த கெபியை
இக்கடலுக்கு
காணிக்கையாக்கிய
 கடற்க்கரை சகாய தாயே
எங்களை காத்தருளும்
சுனாமி காலத்தில்
பொங்கியெழுந்த/
கடலின் சீற்றத்திலிருந்து
எங்களை காப்பாற்றிய கருணைத் தாயே
எங்கள் மன்றாட்டை
இறை இயேசுவிடம் எடுத்துச் சொல்லும்
துன்ப துயரங்களிலிருந்து
எங்களை காப்பாற்றும்
தீராத வியாதிகளிலிருந்து எங்களை விடுவித்தருளும்
வறுமையில் வாழும் எங்கள் வாழ்வை வளமாக்கும்
எங்களுக்கு சமாதானத்தை தந்தருளும்
ஆமென்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: