கடவுளை ஏற்றுக்கொள்ள …

“என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்று இயேசு கூறுகிறார்? இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு எது தடையாக இருக்கிறது? நாம் இயேசுவிடத்தில் செல்வதற்கு என்ன தயக்கம்? இயேசுவை ஏற்றுக்கொள்வது எளிதானது போல தோன்றினாலும், அது சவால்கள் நிறைந்த பாதையாக இருக்கிறது. அதுதான் இங்கே தடையாக, தயக்கமாக இயேசுவால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இன்றைக்கு இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு நம்முடைய பதவி, நாம் பெற்றிருக்கிற பட்டங்கள், நாம் சேர்த்து வைத்திருக்கிற செல்வங்கள் தடையாக இருக்கிறது. ஏனென்றால், நாம் இயேசுவின் மீது நாட்டம் வைத்திருப்பதை விட, மேற்சொன்னவைகள் மீதுதான் அதிக நாட்டம் வைத்திருக்கிறோம். அதுதான் நமக்கு பெரியதாகத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட எண்ணங்களை மாற்றுவது என்பது எளிதானது அல்ல. ஏனென்றால், நாம் வாழக்கூடிய இந்த உலகமும் இதுபோன்ற சிந்தனைகளை நமக்குத் தந்துகொண்டே இருக்கிறது.

நாம் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு இவையெல்லாம் தடையாக இருக்கிறதா? தடையாக இருந்திருக்கிறதா? என்று சிந்திப்போம். எந்நாளும் நாமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வதற்கு, கடவுளின் அருள் வேண்டி மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: