கடவுள் நமக்கு விதித்த வழிகளில் நடப்போம். இணைச்சட்டம் 5:33.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நம் ஆண்டவராகிய கடவுள் நமக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்தவும்,செப்புக்கதவுகளை,உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை தகர்த்து இருளில்  மறைத்து வைத்த கருவூலங்களை யும்,புதையல்களையும்,தர காத்திருக்கிறார்.ஏனெனில் நம்மை பெயர்
சொல்லி அழைத்த ஆண்டவர் அவரே என்று நாம் அறியும்படிக்கு இதை செய்கிறார். எசாயா 45:2,3. ஆகையால் நாம் அதை பெற்றுக்கொள்ள நம்மை தகுதிப்படுத்த வேண்டுமாய் விரும்புகிறார். நாம் அவர் விதித்த வழிகளில் நடந்தால் நிச்சயம் அவைகளை எல்லாம் பெற்றுக்கொள்வோம் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை.

ஒளியை உண்டாக்கி, இருளை படைத்து நல்வாழ்வை அமைத்து கொடுப்பவர் அவரே. உலகை உருவாக்கி அதின்மேல் மனிதரை படைத்து, வானத்தை விரித்தவரும் அவரே.அவரின்றி கடவுள்
இல்லை. நீதியுள்ளவரும்,மீட்பு அளிப்பவரும் அவரே, முழங்கால் அனைத்தும் அவர்முன் மண்டியிட செய்கிறவரும் அவரே. இத்தனை வல்லமை உள்ள தேவனின் திருவுளத்தை அறிந்து அவருக்கு பிரியமாய் நடந்து இந்த தவக்காலத்திலும் அவரின் பிள்ளைகள் என்ற நற்பெயரை பெற்றுக்கொள்வோம்.அப்பொழுது நாம் நினைப்பதற்கு மேலான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.

அவர் நமக்கு கஷ்டமான வழிகளை தரவில்லை. அவரை உண்மையாய் நேசிக்கும்படி அறிவுறுத்துகிறார். அவரையே நம்பி அவர்மேல் நம்பிக்கை வைத்தால் எல்லா நன்மைகளும் நமக்கு கிடைக்குபடி அருள்பொழிவார். ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை. காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! அவரே நம் பங்கு என்று நம் மனம் சொல்லுமேயானால் அவர் நல்லவர். புலம்பல் 3:22-24.

ஆண்டவரின் சத்தியத்தை அறிந்தோமானால் அது நம்மை விடுவிக்கும். ஏனெனில் அவரே வழியும், உண்மையும்,வாழ்வுமாய் இறுக்கி றார். யோவான் 14:6. அவர் நமக்காக சிந்திய இரத்தம் நம்மை எல்லா பாவங்களில் இருந்தும்,சாபங்களில் இருந்தும் விடுவித்து காப்பாற்றும்.அவரது இறக்கைக்குள் அடைக்கலம் புகுந்து சுகமாய் வாழலாம்.அன்பானவர்களே!இன்றும் கூட நாம் அவரைப்பற்றிக்கொண்டு அவர் விதித்த வழிகளில் நடக்கலாமே!!!!!!!!!

ஜெபம்.

அன்பின் இறைவா! நீர் எங்களுக்கு வகுத்து கொடுத்த விதிமுறைகளை நாங்கள் அப்படியே பின்பற்றி உமக்கு மகிமை சேர்க்க உதவிச்செய்யும்.நாங்களே பாதைகளை அமைத்து கொள்ளா தபடிக்கு எங்களை பாதுகாத்துக்கொள்ளும்.தாயின்வயிற்றில் தோன்றியது முதல் எங்களை ஏந்தி,தாங்கி,நரை வயதுமட்டும் சுமந்து வரும் உம்மை இன்னும்,இன்னும்,அதிகமாக அன்பு செய்து உமக்கு கீழ்படிந்து வாழ போதித்து காத்துக்கொள்ளும்.எங்கள் மேல் கண்ணை வைத்து எங்களுக்கு ஆலோசனை அருளி காத்துக்கொள்ளும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: