கடைசி நேரத்தில் கத்துவது சரியா?

மத்தேயு 14:22-36

”அனுதினமும் ஆண்டவரை வணங்க வேண்டும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நொடியிலும் கடவுளைத் தேட வேண்டும்” என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இதைத்தான் நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும், இறையடியார்களும் நமக்கு கற்றுத்தருகிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல் என்பது, ”கடவுளோடு நீ பயணித்தால் பரிசுத்தமாவாய், பாதுகாப்பு கிடைக்கும், பயங்கள் பறந்து போகும், உன் பாதை தெளிவாகும்” என்பதாகும்.

இவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து கற்ற நாம், கடவுளை அனுதினமும் தேடுகிறோமா? கடவுளோடு தினமும் பேசுகிறோமா? என்பது கேள்விக்குறி. கடைசி நேரத்தில் தான் கடவுளை தேடுகிறோம், கடைசி நேத்தில் தான் கத்துகிறோம், கதறுகிறோம். அதனால் பலன் ஏதும் உண்டோ?

கடைசி நேரத்தில் கடைவுளை தேடுவோருக்கு, கடவுளை நோக்கி கதறுவோருக்கு இன்றைய நற்செய்தி வாசகம் மிகச் சிறந்த உதவியாக வருகிறது. பேதுருவுக்கு கடலில் நடக்கின்ற வல்லமையை ஆண்டவர் இயேசு அருளினார். கொஞ்ச தூரம் சென்ற பிறகு அவர் கடவுளை மறந்து விட்டார். தன்னுடைய வல்லமையால் அவர் நடப்பதாக உணா்ந்தார். கடவுளை பற்றி நினைக்கவே இல்லை. ஆகவே பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சிபோனார். நடுங்கிபோனார். மூழ்கும்போது தான் ஆண்டவரைத் தேடினார். ”ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார், கதறினார்.

ஆண்டவரை தேடாத அந்த நேரத்தில் பேருது பயத்திலே மூழ்கிவிடடார், கவலையிலே மூழ்கிவிடடார், மரண வேதனையிலே மூழ்கிவிடடார். நாமும் ஆண்டவரை தேடாத நேரங்களில் பயம், கவலை மற்றும் மரண வேதனைகளிலே மூழ்குகிறோம். கடைசி நேரத்தில் கத்துவதால் எந்த பயனும் இல்லை. அனுதினமும் ஆண்டவரை ஆராதிப்போம். தொடர் இணைப்பிலே இருந்து இடைவெளியில்லா இன்பத்தை அனுபவிப்போம்.

மனதில் கேட்க…

கடைசி நேரத்தில் கடவுளை தேடும் நபரா நான்?
அனுதினமும் ஆண்டவரை தேடி, அவரோடு உறவாடி இடைவெளியி்ல்லா இன்பத்தை நான் அனுபவிக்கலாமே?

மனதில் பதிக்க…
இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள் (திபா 148:12)

~அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: