“சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.”

இயேசுவின் அன்புக்குரியவரே!

சில மட்டுமே நூறு மடங்கு பலன்கொடுத்துள்ளன. ஏன் எல்லாம் முழுமையான பலனைக் கொடுக்கவில்லை. விதையில் எந்த குறையும் இருந்ததாகத் தெறியவில்லை. எல்லா விதைகளும் முளைத்துள்ளன. எனவே முளைத்த பின், அதன் வளர்ச்சியின்போது தடைகள் ஏற்பட்டுள்ளன.

மூவித நிலத்திலும் மூவித தடைகள் ஏற்படுகின்றன. இத்தடைகளை அகற்றினால் எல்லா நிலங்களும் நூறு மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

முதல் நிலத்தில் அதன் வளர்ச்சிக்கான தடை வெளியிலிருந்து வருவதைப் பார்க்கிறோம்.வானத்துப் பறவைகள் வெளியிலிருந்து வந்து விதைகளைத் தின்று விடுகின்றன. இப்பறவைகளை கடுமையான அலகைக்கு ஒப்பான, முற்றிலும் அழிக்கக்கூடிய தீய சக்திக்கு இணையாக்கலாம்.

இரண்டாவதாக, ஆதிப்பெற்றோரின் முதல்பாவத்தால் நம்முள் இயற்கையாக உள்ள பலவீனங்கள். மண்ணுக்குள் மறைந்திருக்கும் பாறை போல, இப்பாவ இயல்பும் இறை வார்த்தை விதையைப் பலன் கொடுக்காமல் தடுத்துவிடுகிறது.

மூன்றாம் தடையாக, நாளடைவில் நாமே உருவாக்குபவைகள் செயல்படுகின்றன.நாம் திரும்பத் திரும்ப திட்டமிட்டு செய்யும் பாவங்கள், குற்றங்கள், பழக்க வழக்கங்கள் கூட இருந்து,பயிரையும் வளரவிட்டு நாளடைவில் பலன் கொடுக்கவிடாமல் அழித்துவிடுகின்றது.நூறு மடங்கு பலன்கொடுக்க இத்தடைகளை அகற்றுவோம். நிறைந்த பலன்களோடு வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;

~ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: