சுயநல சட்டங்கள்

“கொர்பான்“ என்கிற வார்த்தையின் பொருள் “பரிசு, கொடை, காணிக்கை“ என்பதாகும். அதாவது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். அது கடவுளுடைய உடைமையாகக் கருதப்படுவதாகும். கடன் கொடுத்த மனிதர், வாங்குவதற்கு வேறு வழியில்லாமல், கடைசியாக, நான் உனக்குக் கொடுத்த கடன் “கொர்பான்” என்றால், கடன்பெற்றவர் அந்த கடனை, கடவுளுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய மிகப்பெரிய நெருக்கடி நிலைக்கு உள்ளாகிறார்.

இயேசு வாழ்ந்தகாலத்தில், இது தவறாகப்பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒரு பெற்றோர் தனது பிள்ளையிடத்தில், மிகவும் கஸ்டமாயிருக்கிறது என்று உதவிகேட்கிறபோது, அந்த பிள்ளை, எனது உடைமைகளை, நான் “கொர்பான்“ என்று கடவுளுக்கு கொடுத்துவிட்டேன். என்னிடம் உள்ளது எல்லாம், கடவுளுடையது. எனவே என்னால், எதுவும் செய்ய முடியாது, என்று பதில் சொல்கிற நிலை பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெற்றோரைப் பேணிக்காப்பது, மோசே கொடுத்த பத்து கட்டளைகளுள் ஒன்று என்பதை, அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆக, கடவுளின் பெயரால், கடவுளின் சட்டங்கள் உடைக்கப்பட்டன.

இப்படிப்பட்ட இரட்டை வேடதாரிகளை இயேசு கடுமையாகச் சாடுகிறார். கடவுளின் பெயரால் சட்டங்களை எழுப்பி, தங்களுக்கு ஏற்ப, அவற்றை வளைத்து, சுயஇலாபம் அடைகிற, சுயநலம்பிடித்தவர்களை, இயேசு வெறுக்கிறார். அந்த கூட்டத்தில் நாமும் இருந்தால், இயேசுவின் வழியில் நடக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: