செபம்

இரக்கத்திற்கான செபம்

ஆண்டவராகிய இயேசுவே !எங்கள் மேல் இரக்கம் வையும்.எங்கள் மேல் இரக்கமாயிரும்.எங்களைத்
தீர்ப்பிடாதேயும்,எங்கள் மூதாதையரின் எல்லாக் குற்றங் குறைகளையும் பாவங்களையும் மன்னித்தருளும்.எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கிவிடும்.எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும் .
(காலையிலும் மாலையிலும் 5 நிமிடம் சாஷ்டாங்கம் செய்து இந்தச் செபத்தைச் சொல்ல வேண்டும் )
                                                      

இயேசுவின் உதவியை வேண்டிச் செபம்
இரக்கமுள்ள இயேசுவே !உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம்.உம்மில் நம்பிக்கை வைக்கிறோம் .
எங்கள் பலவீனத்திலும் இயலாமையிலும் எங்களுக்கு உதவியாக வாரும்.உம்மை அனைவரும்
அறிந்து நேசிக்கும்படி செய்ய எங்களுக்கு வரந்தாரும்.அணைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது அன்பின் மகிமைக்காகவும்,எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும் உள்ள
தீய சக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரந்தாரும் -ஆமென்.
                                                      

ஆன்மாக்களுக்காகச்    செபம்
ஆண்டவரே !உமது எல்லையற்ற அன்பினால் எல்லாப் பாவிகளையும் மன்னித்து உமது நீதியின் வழியில் நடத்திச் செல்லும்.இவர்களைச் சார்ந்தவர்களையும் தீமையின் கொடுமையினின்று
பாதுகாத்தருளும்.தீமை செய்த அனைவரையும் மீட்டருளும்.இறைவனின் இரக்கம் அவர்கள் மேல்
இருப்பதாக.
என் தேவனே !எனது இறைவனும் என் அனைத்துமானவரே!என் இயேசுவே ! இரக்கமாயிரும்.
இயேசு கிறிஸ்துவே இரக்கத்தின் அரசே !நாம் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசு மரி சூசை !நான் உங்களை அன்பு செய்கிறேன்.ஆன்மாக்களை மீட்டருளுங்கள்.ஆமென் .

இயேசுவின் திரு இருதயத்துக்குக் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்:
இயேசுவின் திரு இருதயமே ! குடும்பங்களுக்கு நீர் செய்துவரும் எல்லா நன்மைகளையும்
நினைத்து நன்றியுடனும் அன்புடனும் உம் திருப்பாதத்தில் பணிந்து வீழ்கிறோம்.  
அன்புள்ள இயேசுவே! எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்
நீர் எங்களை ஆசிர்வதித்து இப்போதும் உமது திரு இதய நிழலின் நாங்கள் இளைப்பாரச் செய்தருளும் .
தவறி எங்களின் யாராவது உமது திரு இதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைக் கழுவாய் செய்கிறோம் .உமது திரு இதயத்தை பார்த்து எங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவரை மன்னித்தருளும்.
மேலும், உலகின் உள்ள எல்லாக் குடும்பங்களுக்காகவும் உம்மை  மன்றாடுகிறோம்  பலவீனர்களுக்குப்  பலமும், வயோதிகர்களுக்கு ஊன்றுகோலும்,விதவைகளுக்கு ஆதரவும்,
அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாய் இருக்கத் தயைபுரிந்தருளும்.ஒவ்வொரு வீட்டிலும்
நோயாளிகள்,மரண வேளையில் இருப்போரின் தலைமாட்டில் நீர்தாமே விழித்துக் காத்திருப்பீராக!
இயேசுவின் இரக்கமுள்ள திரு இதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ அன்போடு அணைத்தீரே!
எங்கள் பங்கில் உள்ள பிள்ளைகள் அனைவரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் அவர்களை
ஆசீர்வதியும்.அவர்களுடைய இதயத்தில் பற்றுறுதியையும் இறையச்சத்தையும் வளரச் செய்யும்.
வாழ்நாளில் அவர்களுக்கு அடைக்கலமாகவும்,இருதிவேளையில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.
திவ்விய இயேசுவே! வாழ்நாளெல்லாம் உமது திரு அன்பிலே வாழ்ந்து இறந்து முடிவில்லாக்
காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற அருள்வீராக -ஆமென்.

                             மிகவும் இரக்கமுள்ள தாயே 
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உதவி நன்மைகளை
இரந்து உம்முடைய பரிந்துரையைக் கெஞ்சிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டார் என்று
உலகின் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும்.கன்னியருடைய அரசியான
கன்னியே! தயையுள்ள தாயே இத்தகையே நம்பிக்கையால் தூண்டபெற்று உம்முடைய திருவடியை
அண்டி வருகிறேன்.பெருமூச்சுடனும் அழுகையுடனும் பாவி நான் உம கருணைக்கு காத்துக்கொண்டு
உம் திருமுன் நிற்கிறேன்.மனுவுருவான வாக்கின் அன்னையே என் மன்றாட்டைப் புறக்கணியாமல்
எனக்காக தயவாய் வேண்டிக் கொள்ளும் -ஆமென்.
அமலோற்பவியான புனித மரியாயே !பாவிகளுக்கு அடைக்கலமே !இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம் :எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம் திரு மைந்தனை
வேண்டிக்கொள்ளும்  .

You may also like...

Leave a Reply

%d bloggers like this: