செவ்வாய்க்கிழமை

 திரிகால செபம்     கர்த்தர் கற்பித்த செபம்

எல்லாம் வல்ல இறை தந்தாய்! உம்முடைய நன்மை தனத்தின் மூலம் நீர் எனக்களித்த இன்னுமொருநாளுக்காக நன்றி கூறி உமக்கு அர்ப்பனிக்கின்றேன் என்னை ஆசிர்வதியும்.இதனால் என் ஒவ்வொருசெயலும் உம் பெருமையை எடுத்துரைப்பதாக. என் விமரிசையை ஒளிர செய்யும்.என்ஆளுமையை பலப்படுத்தும்.என் இதயத்தை வழிநடத்தும்.

   வாரும் இறைவா! உம்முடைய ஏவுதலால் உம் முன் நடப்பேனாக. என் செயல் ஒவ்வொன்றுக்கும்
   துணைநிற்பீராக.என் செபமும்,வேலையும் உம்மில் துவங்கி முடிவு பெறுவதாக.விண்ணக      புனிதர்கள் அனைவரும் நான் உம்முடன் இணைந்து உம் ஆசிரால் உம் சித்தத்தை நிறைவேற்ற       வேண்டுமென்று செபிக்க வேண்டுகிறேன்.
  என் நண்பர்களையும்,அனைத்தையும் படைத்த இறைவா! இன்று நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அன்புடன் பழக உதவும்,அனைவரையும் அன்புடன் அரவணைத்து,
   நல்வார்த்தைகளை நல்கி அனைவருக்கும் நான் உதவிக் கரம் நீட்டி வாழ வரமருளும்.ஆமென்.
  மங்கள வார்த்தை செபம்
  காவல் தூதர் செபம்
  தலைவர்:-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நன்மை ஆசிர்வதிப்பாராக.ஆமென்.
  முடிவுப் பாடல்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: