ஞாயிறு

திரிகால செபம் 

  கர்த்தர் கற்பித்த செபம்
  இரக்கமுள்ள புனித இறைவா! புதிய நாள் துவங்கி உள்ளது . எனக்கொரு புதிய நாளை கொடுத்துள்ளீர் .
  புதிய வாழ்வைக்கொடையாக கொடுத்தமைக்கு நன்றி .நான் உம்மை அறிந்தமைக்கு ,வாழ்வின்         அனைத்துக் கொடைகளுக்கும் நன்றி .மிகவும் சிறப்பாக எப்போதும், எல்லா நேரங்களிலும் என்னை
  நினைத்தமைக்கு அன்பு செய்தமைக்கும் நன்றி. என் மனதை இன்ப படுத்தியமைக்கு நன்றி.எனவே
  என்னுடைய இந்த நாளையும் ,சொல் , சிந்தனை அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறான் .என்      அமைதி ,இன்ப துன்பங்கள் அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறான்.
   எது நல்லது?எது கெட்டது?என்பதை எனக்கு தெளிவுப்படுத்தும் .இதனால் நான் உன் சித்தத்தை
   நிறைவேற்றுவனாக .நான் உம்மை எப்போதும் நினைத்து வாழ அருள் தாரும் .இதனால் நான் என்
   மனச்சன்றிர்க்கும் ,அதன் உறுத்துதளுக்கும் முழு ஒத்துழைப்புடன் என் பிழைகளை குறைத்து
   வாழ்வேனாக.
   சோதனைகளை எதிர்த்துப் பாவத்தை குறைத்து வாழ பலம் தாரும் .என் குறைகள் ,சோம்பலை
   ஒழிக்க எனக்கு உதவி செய்யும் உள்ளத்தைத் தாரும ,இந்நாளை உம் மகிமைக்காக
   செலவழிப்பேனாக .
   அன்பு தாயே!அரசியே! மரியே!என்றும் என்னுடன் இரும் உம்முடைய கனிவுடைய அரவணைப்பு என்னை காப்பதாக.புனித மைக்கேல் காவல் தூதர் .என் பெயர் கொண்ட புனிதர் அனைவரும் எனக்காக
    செபிப்பார்களாக .ஆமென் .

You may also like...

Leave a Reply

%d bloggers like this: