திருச் சிலுவை முன்பு ஜெபம்

மிகவும் கனிவும் இனிமையும் கொண்ட இயேசுவே!என் முன் ஆன்ம ஆவல்களுடன் உம் திரு
முன் முழந்தாளிட்டு வேண்டுகிறேன்,விசுவாசம்,நம்பிக்கை,அன்பு என்னும் வரங்களால் என் 
ஆன்மாவை புதுபித்து உண்மையாக என் பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும் ஆழ்ந்த பாசத்தோடும்,வருத்தத்தோடும் உம் திருக்காயங்களை தியானித்து உம்மைப் பற்றி தாவீது
முன்னுரைத்த படியே,ஓ என் நல்ல இயேசுவே!”அவர்கள் உம் கைகளையும்,கால்களையும்
துளைத்து உம் எலும்புகளையும் எண்ணினார்கள்”என்பதை நினைவு கூர்ந்து வாழச்
செய்தருளும்.ஆமென்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: