துன்பங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும் கருவிகள்

யூதர்கள் தங்களை தூய இனத்தவராக கருதினர். அவர்கள் வேறு இனத்தவரிடம் பெண் கொடுப்பதுமில்லை. எடுப்பதுமில்லை. அவர்களோடு எந்த உறவும் வைப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்கள் தூய யூத இனத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டு. சமாரியர்கள். கானானியர்களுக்கும், யூதர்களுக்கும் தொடக்கத்தில் இருந்தே பகைமை உணர்வு இருந்து வந்தது.

இயேசுவினுடைய பணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அவர் தன்னுடைய பணிவாழ்வின் எல்லையை குறுகிய வட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், தன்னுடைய பணிவாழ்வின் எல்லையை குறுகிய வட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், இங்கேயோ ஒரு புற இனத்துப்பெண் அவரிடத்திலே உதவி கேட்கிறாள். மறுக்கவும் முடியாது. எனவே, உதவுவதற்கு முன்னதாக அவளுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்த இயேசு முயற்சி எடுக்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் இந்த உரையாடல். நம்முடைய வாழ்விலும் துன்பங்கள் வருகிறபோது, கடவுளைக்கடிந்து கொள்ளாமல், கடவுள் எதையாவது உணர்த்த விரும்புகிறாரா? என்று நம் வாழ்வை சுய ஆய்வு செய்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

நமது வாழ்வில் நடப்பவை நமது விசுவாசத்தை அதிகப்படுத்தக்கூட இருக்கலாம். இதை கானானியப்பெண் உணர்ந்து கொண்டாள். தனது விசுவாசத்தை அதிகப்படுத்திக்கொண்டாள். இறையருளைப்பெற்றுக்கொண்டாள்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: