துயரம் மகிழ்ச்சியாக மாறும் !

ஆண்டவர் இயேசுவின் வாக்குறுதிகள் அனைத்திலும் நமக்கு மிகுந்த ஆறுதல் தருவது இதுதான்: உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”. இயேசு தம் சீடர்களுக்குப் போலியான வாக்குறுதிகளைத் தரவில்லை. ‘உங்களுக்குத் துயரமே வராது’ என்று சொல்லவில்லை. ‘நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், துயருறுவீர்கள்’ என்றுதான் சொன்னார். ஆம், இயேசுவின் சீடராய் வாழ்வதில் பல இடையூறுகள் எழத்தான் செய்யும். ஆனால், துயரமே வாழ்வாகிவிடாது. துயரம் மகிழ்ச்சியாக மாறும். அதுதான், இயேசுவின் சொந்த அனுபவம்கூட. அவரது பாடுகள், துன்பங்கள், இறுதியில் சிலுவைச் சாவு; அத்தோடு அவரது வாழ்வு தோல்வியாக முடிந்துவிடவில்லை. மாறாக, உயிர்ப்பில், வெற்றியில் நிறைவுபெற்றது. அதுபோலவே, நமது வாழ்விலும் இயேசுவின் மதிப்பீடுகளுக்காக நாம் துயரங்களைச் சந்திக்கும்போது, இறுதியில் அந்தத் துயரங்கள் நீங்கி, நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் நிச்சயம் கிட்டும். இந்த நம்பிக்கையோடு நாம் சீடராய் வாழ்வோம்.

மன்றாடுவோம்: வாக்கு மாறாத இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் வாக்களித்தவாறே எங்கள் துயரங்கள் நீங்கி, எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துன்பங்கள் குறித்து, அழுது புலம்பாமல், துணிவுடன் வாழ அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

~ அருட்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: