தூய ஆவியையை பெற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது நம்பிக்கையுடன் கேட்டால் கேட்டதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள். மத்தேயு 21:22. தூய ஆவியை நாம் பெற்றுக்கொண்டால் ஆவியானவர் எல்லா காரியங்களிலும் நம்மோடு கூடவே இருந்து நாம் நடக்க வேண்டிய பாதையையும், செய்ய வேண்டிய செயல்களையும் நமக்கு உணர்த்துவார். நாம் தவறு செய்யும்பொழுது அது தவறு என்று நம் இதயத்தில் உணர்த்தி நம்மை நல்வழிப்படுத்துவார். ஆவியானவர் இருக்கும் இடத்தில் நிச்சயம் விடுதலை உணடு. 1 கொரிந்தியர் 3:16.

பாவிகளுக்கு கடவுள் செவிசாய்ப்பதில்லை: இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவுசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.யோவான் 9 : 31.ஆகையால் அன்பானவர்களே! உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு நீங்கள் விரும்பியதை தந்தருள்வார்.

நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். ஆகையால் நாமும் அவர்மீதே அன்புக்கொண்டு அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போம். நமக்கு உதவும் பொருட்டே நம்மோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை நமக்கு அருளும்படி செய்திருக்கிறார். அவரே நமக்கு உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்.

உலகம் தூய ஆவியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களால் இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நாம் அவரை அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் நம்மோடு தங்கி இருக்கிறார். நமக்குள்,நம் உள்ளத்திற்குள் இருக்கிறார். ஆகையால் அவர் நம்மை திக்கற்றவர்களாக விடவே மாட்டார். நம்மிடம் கூடவே இருந்து நாம் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் நமக்கு போதித்து நல்வழிப்படுத்துவார்.ஆகையால் நாம் விரும்பி, வேண்டி, அவரை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு எல்லாவிதமான ஆசீரையும் பெற்று நலமுடன் வாழ்ந்து பிறர்க்கும் பயன்படுவோம். இதுவே நம் ஆண்டவராகிய கடவுள் விரும்பும் வாழ்க்கையாகும். இதுவே அவரின் சித்தமும் ஆகும். அவரின் சித்தப்படி செய்கிறவர்களுக்கு அவர் எல்லா ஆசீர்வாதங்களையும் அருளிச்செய்வார்.

ஜெபம்

அன்பின் தகப்பனே! நீர் எங்களுக்கு உமது தூய ஆவியை கொடுத்து எங்களை பாவங்களிலிருந்தும், சாபங்களிளிருந்தும், மீட்டெடுக்க உம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தீரெ உமக்கு நன்றி ஐயா. உமது ஆவியானவர் எங்களுக்கு போதித்து காத்து கொள்வதற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஏறேடுக்கிறோம் நாங்கள் ஜெபத்திலே கேட்பவற்றை பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறோம். எங்கள் விசுவாசத்தை உறுதி படுத்தியருளும். துதி, கனம், மகிமை உமக்கே செலுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் அருமை மீட்பரே! ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: