தூய ஆவி

இன்றைய நற்செய்தியில் (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23) இயேசு தன் சீடர்களுக்கு தூய ஆவியைக்கொடுக்கிறார். யோவான் நற்செய்தியாளர் தூய ஆவியைப்பற்றி எழுதும்போது நிச்சயமாக தொடக்கத்தில் தூய ஆவியின் பங்களிப்பை நினைவுகூர்ந்து எழுதியிருக்க வேண்டும். தொடக்கநூல் 2: 7 ல் பார்க்கிறோம்: “அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்”. எசேக்கியேல் 37: 9 சொல்கிறது: “மானிடா! இறைவாக்குரைத்து உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்”. இங்கே உயிர்தருகிறவராக தூய ஆவியானவர் சித்தரிக்கப்படுகிறார்.

சோர்ந்து போயிருக்கிற உள்ளங்களுக்கும், வாழ்க்கைப்புயலில் அடித்துச்செல்லப்பட்டு கரைகாண முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் உடைந்தவர்களுக்கு உறுதிதரும் பணியைச்செய்கிறவர் தூய ஆவியானவர். பயந்து நடுங்கிக்கொண்டு, தங்களது உடைமைளையும், உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ள பயந்து ஓடிய சீடர்களுக்குத் துணிவைத்தந்தவர் தூய ஆவியானவர். அவர் ஒரு பொருளல்ல. ஆண்டவரின் ஆவி.

ஆவியானவரின் பிரசன்னத்தால் நிரப்பப்பட நாம் மன்றாட வேண்டும். இந்த தூய ஆவிதான் வழிநடத்துகிறவர். அன்புப்பணி செய்யத்தூண்டுகிறவர். உண்மைக்கு குரல் கொடுக்க உறுதியைக்கொடுக்கிறவர். அந்த தூய ஆவியானவரின் ஆற்றலோடு, இறைவனுக்கேற்ற பணிகளைச்செய்வோம்..

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: