தேவையும், நிறைவும்

இயேசு எத்தனையோ முறை செபித்திருப்பார். கடவுளிடத்தில் செபம் வழியாக இணைந்திருப்பார். சீடர்களும் நிச்சயமாகக் கவனித்திருப்பார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில் செபம் என்பது அவர்களது வாழ்க்கையின் அங்கம். எனவே நிச்சயம் சீடர்களுக்கு செபிக்கத் தெரியாது என்பது கிடையாது. அப்படியென்றால் ஏன் சீடர்கள், இயேசுவைக் கேட்க வேண்டும்? எதற்காக செபிக்கக் கற்றுத்தர வேண்டும் என்று, ஆசைப்பட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இல்லை.

சீடர்களுடைய இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் மனநிலையைப் போலத்தான் இருக்கிறது. ஒரு குழந்தை ஏதாவது வைத்திருந்தால், அதையே மற்றொரு குழந்தையும் கேட்கும். தன்னுடைய வீட்டில் எத்தனையோ, அதைவிட சிறப்பான விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும், அதைத்தான் கேட்கும். சீடர்கள் செபிக்க வேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை. மாறாக, யோவான் தம் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக்கொடுத்தது போல, தங்களுக்கு கற்றுக்கொடுக்க அழைப்பு விடுக்கிறார்கள். தேவை என்பதை விட, பகட்டிற்காக, பார்வைக்காக நம்மில் பல செயல்பாடுகளில் இறங்குகிறோம்.

இந்த சமுதாயம் நுகர்வுக்கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனக்கு எது தேவையோ அதை வாங்க வேண்டும் என்பதை விட, எதுவெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் வாங்க வேண்டும் என்கிற அந்த நுகர்வுக்கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்வது, தேவையில் இருக்கிறவனுடைய உடைமைகளை நாம் பறித்துக் கொள்வதற்குச் சமம். நிறைவோடு வாழ பழகிக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.