நன்றி கூறுவோம் !

இன்று ஆண்டின் இறுதி நாள்! இறைவனுக்கு நன்றி கூறும் நாள். இந்த ஆண்டைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அதன் நன்மைகளுக்காக, ஆசிர்வாதங்களுக்காக, வெற்றிகளுக்காக நன்றி கூறும் நாள். இந்த நாளில் ஆண்டு முழுவதும் நம்மை அரவணைத்த அன்பு இறைவனைப் போற்றுவோம். இந்த ஆண்டில் நாம் அடைந்த வளர்ச்சிகளுக்காக நன்றி கூறுவோம்.

இந்த ஆண்டின் தவறுகள், தோல்விகள், நோய்கள், இன்னல்களையும் நினைத்துப் பார்ப்போம். அவற்றிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லது. எந்தத் தோல்வியிலிருந்தும், தவறிலிருந்தும் நாம் நன்மைகளை அடையலாம். முதலில், தவறுகளை, தோல்விகளை ஏற்றுக்கொள்வோம். தோல்வி என்பது யாருக்கும் நேர்வதுதான். அதில் தவறில்லை. தோல்வியிலேயே துவண்டுவிடுவதுதான் தவறு. அடுத்து, அந்தத் தோல்விகள், தவறுகள் ஏன் நிகழ்ந்தன என எண்ணிப்பார்ப்பதும், ஆய்வு செய்வதும் நன்று. இவையும் நமக்கு உதவும். மூன்றாவதாக, இனி இத்தகைய தோல்விகள், தவறுகள் நேராதபடி கவனமாயிருக்க உறுதி பூணுவோம். இந்த ஆண்டின் இறுதி நாளை மகிழ்ச்சியுடன் கழிப்போம்.

மன்றாடுவோம்: தொடக்கமும், முடிவுமான இறைவா, இந்த ஆண்டின் இறுதி நாளில் நன்றியோடு உம்மைப் போற்றுகிறேன். இந்த ஆண்டு முழுவதும் காத்துக்கொண்டீரெ, உடலுக்கும், உள்ளத்துக்கும் நலம் தந்தீரே. வெற்றிகளும், பெருமைகளும், ஆசிகளும் தந்தீரே, உமக்கு நன்றி. இந்த ஆண்டில் நான் செய்த தவறுகள், செய்யத் தவறிய நன்மைகளுக்காக வருந்துகிறேன். மன்னியும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: