நம்முடைய பெலன் நமது தேவனிடத்தில் இருக்கிறது.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நமது மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நாளிலும் பலவிதமான நோயினால் துன்புறும் உங்களுக்கு நம்முடைய தேவன் என் மகனே!என் மகளே! நீ கலங்காதே, உங்களை நான் குணமாக்குவேன். அதற்காகவே நான் காயப்பட்டேன். என்னுடைய காயங்களை உற்றுப்பாருங்கள். அந்த காயங்களின் தழும்புகளால் நீங்கள் குணமடைவீர்கள். ஏனெனில் உங்களுடைய பலத்தினாலும் அல்ல, பராக்கிராமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினால் அதை நான் செய்வேன், எல்லா காரியமும் ஆகும் என்று சொல்கிறார்.

இதோ உன்னை புடமிட்டேன்: ஆனாலும் வெள்ளியைப்போல் அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னை தெரிந்துக்கொண்டேன். என்னிமித்தம்,என்னிமித்தமே,அப்படி செய்தேன் என்று ஆண்டவர்
சொல்கிறார். நானே முந்தினவரும், பிந்தினவருமானேன், நீங்கள் என்னை உண்மையோடும், ஆவியோடும் தொழுதுக்கொண்டால் நீங்கள் விரும்பும் சுகத்தை உங்களுக்கு கட்டளையிடுவேன், இது முதல் புதியவைகளையும், நீங்கள் அறியாத மறைபொருளானவைகளையும் உங்களுக்கு தருகிறேன் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் செய்கிறார். 18 வருஷங்கள் கூனியாய் இருந்த ஆபிரகாமின் குமாரத்தியை குணப்படுத்தியதுபோல ஒரு நொடிப்பொழுதில் உங்களையும் குணமாக்குவேன். என் மகிமையை உங்களுக்கு விளங்கப்பண்ணுவேன் என்று சொல்கிறார்.

கர்த்தருக்கு பிரியமாய் நடக்க நினைக்கிற நாமும் அவருக்கு சித்தமானதை செய்து அவரால் அன்பு கூரப்பட்டவர்களாய் வாழ்ந்து அவரையே நம்பி, அவரையே துதித்து, அவரையே போற்றி, அவரே தேவன், வேறொருவர் இல்லை, என்று நம் நாவினால் அறிக்கை செய்து அவர் பாதம் பணிந்திடுவோம். அப்பொழுது ஆண்டவர் நமக்கு பிரயோஜனமாயிருக்கிறதை போதித்து, நாம் நடக்க வேண்டிய வழியில் நம்மை வழிநடத்துவார். நாமும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருந்து நமது இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூர்ந்து நல்ல சுகத்தை யும்,ஆரோக்கியத்தையும்,பெற்று அவரை ஸ்தோத்தரிப்போம்.

ஜெபம்

அன்பின் பரலோக தந்தையே! உமக்கு நன்றி சொல்கிறோம். நீர் எங்களை உமது கரங்களால் ஆசீர்வதித்து, உமது காயங்களால் குணமாக்கி உமது ஆவியினால் ஆகும்படி செய்யும். எங்கள் பெலவீனத்தை எல்லாம் எடுத்துப்போட்டு நல்ல சுகத்தை தந்தருளும். உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க செய்யும். சமாதானத்தை கட்டளையிடும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில்
வேண்டுகிறோம் பரம தகப்பனே! ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: