நம்மை வழிநடத்திச் செல்பவர் நம் கடவுளாகிய ஆண்டவரே!

கிறிஸ்து இயேசுவில் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறார். நான்உனக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்துவேன். செப்புக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை தகர்ப்பேன். இருளில் மறைத்து வைத்த கருவூலங்களையும், மறைவிடங்களில் ஒளித்து வைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன் பெயர் சொல்லி உன்னை அழைத்த கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.என்று நமக்கு வாக்கு அருளுகிறார். ஏசாயா 45 :2,3. நாம் அவரை அறியாமல் இருந்தும் நமக்கு பெயரும், புகழும் வழங்கி நமக்கு வலிமை அளிக்கிறார்.

நாம் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து ஆண்டவரை தேடுவோமானால் அவர் நம்மேல் இரங்கி தமது ஆற்றலால் நம்மை நிரப்பி, நலிந்த மற்றவர்களை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நமக்கு தந்து கற்றோனின் நாவை அளித்து, காலைதோறும் நம்மை தட்டி எழுப்பி கற்போர் கேட்பதுபோல் நாம் செவிகொடுத்து கேட்கும்படி செய்கிறார். அவர் வார்த்தைகளை கேட்டு அதன்படி நாம் நடந்தோமானால் அந்தநாள் முழுதும் ஒரு பொல்லாங்கும் நம்மை தொடவே தொடாது. அவரின் செட்டைக்குள் அடக்கலாம் புகழாம் .

மாறுபாடான பாதைகளிலும், கோணலான பாதைகளிலும் நாம் நடவாதபடிக்கு நம்மை கரம் பிடித்து வழிநடத்தி நமக்கு முன்னே போய் நம் பாதையை சரிசெய்வார். நாம் சோர்வுற்று போகாதபடிக்கு
பாதுகாத்து விடுதலை அளிப்பார். நமக்காக யுத்தம் நடப்பித்து நம் தேவைகள் யாவையும் நாம் பெற்றிட அருள்புரிவார். ஆண்டவரே நமக்குமுன் செல்வார்.அவர் நம்மோடு இருப்பார். அவர் நம்மை விட்டு விலகவும் மாட்டார். நம்மை கைவிடவும் மாட்டார்.

ஜெபம்

அன்பான இயேசு ஸ்வாமி, உமக்கு நன்றியை செலுத்துகிறோம். நீரே எங்களுக்கு வழியை ஆயத்தப்படுத்தி வழிநடத்தி செல்வதற்காய் உமக்கு கோடி நன்றிகள். நெருக்கடியான வேளையிலும் ஆண்டவரே உம்மையே மன்றாடுகிறோம். செவி சாய்த்து எங்களை விடுவிப்பவர்
நீரே! நீர் எங்கள் பக்கம் இருக்கும்பொழுது யார் எங்களை தொடமுடியும்? மனிதர்மீது நம்பிக்கை வைக்காமல் உம்மையே நம்புகிறோம். எங்கள் முன்னே போவதற்காய் நன்றி. துதி, கனம் மகிமை
யாவும் உமக்கே! நீர் எங்களை விட்டு விலகுவதுமில்லை. எங்களை கைவிடுவதுமில்லை. வழிநடத்தி செல்லும் ஆண்டவர் நீர் ஒருவரே ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: