நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக

நம் இயேசு விரும்புவதெல்லாம் நாம் அனைவரும் நோய் நீங்கி நலமுடன் வாழ வேண்டும் என்பதே. இதற்காக அவர் எதையும் செய்யவும் எதையும் இழக்கவும் தயாராக உள்ளார். “கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.” (பிலி 2’6-8)

யாரும் அண்டாத தொழுநோயாளியைத் தொடுகிறார். வெறுத்து ஒதுக்கிய மக்களோடு விருந்துண்கிறார். பாவி, விபச்சாரி என்று பழிக்கப்பட்டவர்களோடு பாசத்தைப் பகிர்ந்து கொண்டார். யாருடைய பசியையும் தாகத்தையும் சகிக்க முடியாதவர். விதவையின் வேதனை, பெண்களின் கண்ணீர் தாங்க முடியாதவர். தன்னை நோக்கி குரல் எழுப்பும் எவருக்கும் மறுக்காதவர். எப்பொழுதுமே “நான் விரும்புகிறேன், நலமாயிருங்கள்” என்பதைத் தவிர வேறெதுவும் அவரால் எண்ண முடியாது.

இயேசுவிடம் வாருங்கள். உங்கள் குறைகள், குடும்ப பாரங்கள், உடல் உள்ள நோய்கள், பலவீனங்கள் அனைத்தோடும் இயேசுவிடம் வாருங்;கள். வந்து நம்பிக்கையுடன் கேளுங்கள். அவர் மறுக்க மாட்டார். விரும்புகிறேன். நீங்கள் இனிது வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன் என தன் அருளை அள்ளி வழங்குவார். வாழ்த்துக்கள். ஆசீர்;.

~ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: