நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள

உங்கள் வாழ்க்கையில் நிறைவையும் நிம்மதியையும் காண விரும்புகிறீர்களா? வாழ்க்கையில் எப்போதும் வசந்தம் வீச விரும்புகிறீர்களா? இதோ இன்று ஆண்டவர் சொல்லுவதைக் கேளுங்கள். அந்த பணக்கார இளைஞரிடம் நிறைய நல்ல மனது உள்ளது. நியாயமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ளது. தன் வாழ்வில் கடவுளின் கட்டளைகளையும் அன்றாடக் கடமைகளையும் தவறாது கடைபிடித்து வாழ்ந்துள்ளான். ஆனாலும் இவற்றில் தான் எதிர்பார்த்த நிறை வாழ்வையும் நிம்மதி வாழ்வையும் அவன் காணவில்லை. ஆகவே இயேசுவிடம் வந்துள்ளான்.

இயேசுவோடு உங்கள் வாழ்வில் ஆழத்துக்குள் செல்லுங்கள். உங்கள் குடும்பத்தின் ஆழத்துள் அவரை அழைத்து செல்லுங்கள்.உங்கள் வாழ்வின் பிரச்சினைகளின் ஆழத்துள் இயேசுவை கூட்டிச் செல்லுங்கள. அவர் அந்த பணக்கார இளைஞனை கூர்ந்து நோக்கியது போல உங்கள் உள்ளத்தையும் குடும்பத்தையும் பிரச்சனைக்குரிய இடங்களையும் கூர்ந்து நோக்கட்டும். நோயின் ஆழத்திற்குச் செல்லட்டும்.

நிறைவாழ்வு தேடிய பணக்கார இளைஞனின் வாழ்வின் ஆழத்துள் சென்று, கூர்ந்து நோக்கிய இயேசு, அவனது நோயின் காரணம் அறிந்து அதற்கு மாற்று மருந்து கொடுத்தார். “நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.” (மாற் 10:21) உங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கும் இயேசு உங்கள் நல்வாழ்வுக்கும் நல் விருந்தும் மருந்தும் தருவார்.மகிழ்வோடு ஏற்று வாழுங்கள். நிறை வாழ்வைக் காண்பீர்கள்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

~அருட்திரு ஜோசப் லீயோன்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: