பகிர்வோம், இறையரசில் பங்குபெறுவோம்

பணக்கார இளைஞர் தன்னுடைய வாழ்க்கயைிலே சட்டத்தின் அடிப்படையில் அனைத்தையும் கடைப்பிடித்திருக்கிறார். ஆனால், ஆன்மீக அடிப்படையில் பார்த்தால், அதன் உள்ளர்தத்தையும் மறந்தவராக இருக்கிறார். பத்துக்கட்டளைகளை கடைப்பிடித்தவர், அதன் உள்ளர்த்தத்தையும் மறந்தவராக இருக்கிறார்.

தன்னை அன்பு செய்வது போல, கடவுளை அன்பு செய்வதையும் தன்னை அன்பு செய்வதைப்போல, சக மனிதர்களை அன்பு செய்வதையும் இணைத்துப்பார்க்கத் தவறிவிடுகிறார். அவருடைய தவறு, அவர் மனிதர்களை அன்பு செய்ததை விட செல்வத்தை அதிகமான அன்பு செய்கிறார். மற்றவர்களை அன்பு செய்வதைவிட தன்னை அதிகமாக அன்பு செய்கிறார். இறையாட்சிக்கு தகுதிபெறுவதற்கு தடையாக இருப்பது இவைகள்தான்.

இந்த உலகத்தின் மீது பற்று இருந்தால், மறுஉலகில் செல்வம் சேர்க்க முடியாது என்பதுதான் இயேசு தருகிற செய்தி. தங்களையும், தங்கள் பொருட்களையும் முன்னிறுத்துகிறவர்கள், கடவுளை புறந்தள்ளுகிறார்கள். அதற்கு உதாரணம் இந்த இளைஞர். கடவுளை முன்னிறுத்துவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: