பயனற்ற செல்வம் !

இவ்வுலக செல்வத்திற்காக உழைப்பதனால் ஏற்படும் இழப்புகளை நாம் பட்டியல் இடலாம்:

  • எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் இறுதியில் அது நம்மோடு வரப்போவதில்லை. வேறொருவர்தான் அதை அனுபவிக்கப்போகிறார்.
  • இவ்வுலக செல்வம் நம்மை இறைவனிடம் சேர்ப்பதில்லை. இறைவனைவிட்டுப் பிரிக்கிறது.
  • மிகுதியான செல்வம் இருந்தாலும், நிறைவாழ்வு, மகிழ்ச்சி கிடைக்காது. மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால், ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

இதை நாம் உணரவேண்டும். எனவே, எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு நம் எச்சரிக்கையாய் இருப்போம். இவ்வுலக செல்வத்தைச் சேர்ப்பதற்குப் பதில் இறைவனின் முன்னிலையில் செல்வம் சேர்ப்போம். நமது நல்ல எண்ணங்கள், செபங்கள், நற்செயல்களே இறைவனின் முன்னிலையில் நமது செல்வங்கள். அத்தகைய செல்வத்தின்மீது ஆர்வம் காட்டுவோம்.

மன்றாடுவோம்: எங்கள் ஒப்பற்ற செல்வமாகிய இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அழிந்துபோகும்;, பயனற்ற செல்வத்திற்காக உழைக்காமல், அழியாத வாழ்வு தரும் செல்வத்திற்காக உழைக்க அருள் தாரும். நீரே எம் ஒப்பற்ற செல்வமாய் இருந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: