பயப்படாதே,[அஞ்சாதே]நான் உங்களுடன் இருக்கிறேன்.எசாயா 43:5.

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

வேதத்தில் 365 நாட்களுக்கும் 365 பயப்படாதே என்ற வார்த்தை இருக்கிறது. இது எதை குறிக்கிறது என்றால் நாம் ஒவ்வொருநாளும் பயப்படாமல் இருக்கும்படி நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நாமும் இந்த வார்த்தையை பயன்படுத்தி ஜெபம் செய்து தைரியம் உள்ளவர்களாக மாறுவோம் நானும் எதற்க்கெடுத்தாலும் பயந்த சுபாவத்துடன் இருந்தேன். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை தினமும் வாசித்து தியானிக்கும் பொழுது என் பயம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன், கலங்காதே, நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன். என் நீதியின் வலது கரத்தால் உன்னை தாங்குவேன். எசாயா 41:10 ல் வாசிக்கலாம்.

நம்மை உண்டாக்கியவரும், நம் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கியவரும் நமக்கு உதவி செய்பவரும் அவரே. நான் தேர்ந்துக்கொண்ட எசுரூன் பயப்படாதே நீ அவமானதுக்குள்ளாக மாட்டாய்: வெட்கி நாணாதே. இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய் உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய் என்று ஏசாயா 44:2 , ஏசாயா 54:4 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.

அன்பானவர்களே! நாமும் கூட இந்த நாளில் எதற்கும் பயப்படாமல் சோதனைகளை கண்டு சோர்ந்து போகாமல் நமக்காக உயிரை கொடுத்து இரத்தத்தை சிந்தி நம்மை மீட்ட கடவுள் நம் அருகில், நம் உள்ளத்தில் இருந்து நமது வலதுகரத்தை பிடித்து பாதுக்காத்து கண்ணின் மணியைப்போல் காத்து வருகிறார் என்பதை உணர்ந்து அவருக்கு நன்றிபலிகளை செலுத்துவோம். அவர் செய்த நன்மைகளுக்காகவும், தியாகத்துக்காகவும், அவரை அன்போடு நோக்கி பார்த்து இந்த தவக்காலத்தின் குறிக்கோளை உணர்ந்து செயல்படுவோம். தவம் என்றாலே காத்திருத்தல் என்றுதானே அர்த்தம். அதனால் அதின் அர்த்தத்தை உணர்ந்து காத்திருந்து அவர் அருளும் நன்மைகளை பெற்றுக்கொள்வோம். நாம் படும் பாடுகளில் எவ்வளவேனும் பயப்படாமல் பிசாசின் சோதனைகளுக்கு எதிர்த்து நின்று மரணபரியந்தம் உண்மையாய் இருந்து அவர் அருளும் ஜீவ கிரீடத்தை பெற்றுக்கொள்வோம். வெளி 2:10.

ஜெபம்

அன்பின் இறைவா! உம்மை போற்றுகிறோம்,துதிக்கிறோம். நன்றிபலிகளை ஏறேடுக்கிறோம் இயேசப்பா நாங்கள் எந்த காரியத்தை குறித்தும் கவலைப்படாமல் எங்களை மீட்ட நீர் எங்களை காப்பாற்ற வல்லவர் என்பதை அறிந்து உணர்ந்துக்கொள்ள உதவி செய்யும். எதைக்குறித்தும் பயப்படாமல் கலங்காமல் இருக்க எங்களுக்கு போதித்து வழிநடத்தும். எங்களுடன் கூட இருப்பதற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே!
ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: