பாறைமீது கட்டப்பட்ட வீடு

ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்பவர், செபிப்பவர் விண்ணரசு சேரமாட்டார். மாறாக, தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வார் என்னும் ஆண்டவரின் மொழிகள் இறை நம்பிக்கையுடைய அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வசனம் இது. நமது இறைப்பற்று சொல்லில் முடங்கி விடாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும். செப ஆர்வலர்களுக்கும் வெல்விளியாக இச்சொல் அமைந்துள்ளது. செபக்குழுக்களில் சேர்ந்து செபிக்கிறவர்கள் தங்கள் வாழ்வு தந்தையின் விருப்பப்படி அமைய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், செபம் பயனற்றதாக மாறிவிடும். நமது இறைப் பற்றும் பாறைமீது கட்டப்பட்ட வீடு போல அமையட்டும்.

மன்றாடுவோம்: அழைத்;தலின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். புனித சவேரியாரை மறைப்பணியாளராக அழைத்து, அவர் வழியாக நீர் எங்களுக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அவரது எடுத்துக்காட்டாலும், பரிந்துரையாலும், எங்கள் வாழ்வும் தந்தையின் திருவுளத்திற்கேற்ப அமைவதாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

— அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: