பாவம் வளர வளர அவமானமும் வளரும்

அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார் (மாற்12:9)

மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது இயல்பு. பாவத்திலிருந்து திரும்புவது இறை இயல்பு. தந்தையே நான் உமக்கும், எனக்கும் என் அயலாருக்கும் எதிராக பாவம் செய்தேன். இனி இந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற வாக்குறுதி தான் வானளவு நம்மை உயர்த்தும். நம்மை பரிசோதித்து பார்த்து பாதையை திருத்தாத பயணம் நம்மை பாதாளம் வரை தாழ்த்தும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் பாவத்திற்கு மேல் பாவங்களை தங்கள் மேல் குவித்து அவமானங்களை அள்ளுகின்றனர்.

முதல் பாவம் : ஒரு பணியாளரை நையப்புடைத்தது
இரண்டாம் பாவம் : வோறொரு பணியாளரை தலையில் அடித்து அவமதித்தது
மூன்றாம் பாவம் : மற்றொரு பணியாளரை கொலை செய்தது
நான்காம் பாவாம் : சிலரை நையப்புடைத்தது, சிலரை கொன்றது
ஐந்தாம் பாவம் : திராட்சைத் தோட்ட உரிமையாளரின் அன்பு மகனை கொன்றது

எத்தனை பாவங்கள் பாருங்கள். இத்தனை பாவங்களும் அவர்களை அவர்கள் இருந்த இடத்திலிருந்து இல்லாமல் ஆக்குகின்றன. அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு அனைத்தும் செயலிழந்து போகிறது. பாவத்தின் ஆசை அவர்களை அவமானம் பெற அழைத்துச் சென்றது.

மனதில் கேட்க…

1. நீங்கள் வளர வளர நீங்கள் செய்யும் பாவம் குறைந்திருக்கிறதா? அல்லது வளர்ந்திருக்கிறதா?

2. பாவங்கள் பெருக பெருக அவமானமே பெருகும் – இதை ஒரு நிமிடம் ஒதுக்கி சிந்ததித்ததுண்டா?

மனதில் பதிக்க…

என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன. தாங்கவெண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன(திபா38:4)

– அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: