பாவ மன்னிப்புக்காக

              பாவ மன்னிப்புக்காக
கடவுளே!
உமது பேரன்புக்கேற்ப
எனக்கு இரக்கம் காட்டியருளும்.
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும் .
என் பாவம் அற்றுப் போகும்படி என்னைத் தூய்மைபடுத்தியருளும்.
என் குற்றங்களை நான் உணர்கின்றேன்.
என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக பாவம் செய்தேன்.
உமது பார்வையில் தீயது செய்தேன்
இதே தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்.
பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள் இறைவா!
மெய்ஞ்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்.
என் பாவக் கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே
படைத்தருளும்.
உறுதி தந்து புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே  உருவாக்கியருளும்.
உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும்.
உமது மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.
தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.-ஆமென்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: