பாவ மன்னிப்பு

பின்தொடர்ந்தது. இயேசுவை அவர்கள் கடவுளின் பிரதிநிதியாகவே பார்த்தார்கள். இயேசுவிடத்தில் ஏதோ அதிசயிக்கத்தக்க ஒன்றை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் அவரை ஏராளமான மக்கள் பின்தொடர்ந்தார்கள். இயேசு மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார் என்பதையே மறைநூல் அறிஞர்களின் வருகை எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால், போதிப்பவர்களில் உண்மையானவர் அல்லது போலியானவர் என்பதை, தலைமைச்சங்கம் முடிவு செய்தது. மக்கள் மத்தியில் இயேசு புகழ்பெற்றதனால், அவரைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக, அறிஞர்கள் அங்கே வந்திருந்தனர்.

இயேசு எப்படி பாவங்களை மன்னிக்கலாம்? என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது. ஏனென்றால், கடவுள் ஒருவர் மட்டும் தான் பாவங்களை மன்னிக்க முடியும். அப்படியிருக்க இயேசு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, என்று எப்படிச் சொல்லலாம், என்று அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இயேசு தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இருக்கிறது என்பதை, அழகாக அவர்களுக்கு, எடுத்துக்காட்டு மூலமாக விவரிக்கிறார். அவர்களால் பதில் சொல்லவும் முடியாமல், என்ன சொல்வதென்றும் புரியாமல் விழிக்கிறார்கள். இங்கே இயேசு ஒரு ஆழமான செய்தியைத்தருகிறார். தான் பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொல்வதை விட, தான் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளின் வாய்க்காலாக இருக்கிறேன் என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். தாவீது தவறு செய்தபோது, நாத்தான் இறைவாக்கினர் அவரிடம் அனுப்பப்படுகிறார். தாவீது தனது தவறுக்காக மனம் வருந்தியவுடன், நாத்தான் சொல்கிறார்: ”ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்” (2சாமுவேல் 12: 13). இங்கே நாத்தான் தாவீதின் பாவங்களை மன்னிக்கவில்லை. மாறாக, கடவுளின் மன்னிப்பை எடுத்துரைக்கிறார். அதேபோலத்தான் இயேசுவும், கடவுளின் மன்னிப்பை அங்கே வெளிப்படுத்துகிறார்.

நமது வாழ்வில் நாம் கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்காகத்தான் திருச்சபை, பாவ மன்னிப்பு அரும்அடையாளத்தைத் தந்திருக்கிறது. அருட்பணியாளர் என்றுமே பாவத்தை மன்னிப்பது கிடையாது. அவருக்கு அந்த அதிகாரமும் கிடையாது. மாறாக, கடவுளின் மன்னிப்பை வழங்கும் வாய்க்காலாக அவர் இருக்கிறார். அவர் வழியாக நமக்கு கடவுளின் அருளும் கிடைக்கிறது. அந்த மன்னிப்பையும், அருளையும் நிரம்பப் பெற்றுக்கொள்வோம்.

——————————————————–

ஒருவரின் நம்பிக்கை மற்றவருக்கு இறைஅருளை பெற்றுத்தர முடியும் என்பது இன்றைய நற்செய்தியின் மூலம் தெளிவாகிறது. யூதர்களைப்பொறுத்தவரையில் உடல் நலக்குறைவுக்கும், பாவத்திற்கு தொடர்பு உள்ளதாக நம்பினர். இன்றைய நற்செய்தியிலே வருகிற முடக்குவாதமுற்ற மனிதரின் நிலைமைக்குக் காரணம் அவன் செய்த பாவம் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. எனவேதான், இயேசு ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்கிறார்.

இந்த வாசகத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, முடக்குவாதமுற்றவர்களைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த நால்வரின் நம்பிக்கை. இயேசு அவர்களின் நம்பிக்கையைக்கண்டு அவரைக்குணப்படுத்துகிறார். வழக்கமாக இயேசு, குணம் பெற வந்தவரின் நம்பிக்கையைப்பார்த்து, அவரின் நம்பிக்கையின் பொருட்டு குணப்படுத்துவார். ஆனால், இந்தப்பகுதியில் மற்றவர்களின் நம்பிக்கையைக்கண்டு குணப்படுத்துகிறார். நம்முடைய நம்பிக்கையின் வழியாக மற்றவர்களின் வாழ்க்கையில் கடவுளின் அருளைப்பெற்றுத்தர முடியும். புனித அகுஸ்தினாரின் தாய் மோனிக்காவின் செபம், கடவுள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை, அகுஸ்தினாரின் வாழ்வையே புரட்டிப்போடுவதாக அமைந்திருந்தது. பழைய ஏற்பாட்டிலே சோதோம் நகரை அழிக்கக் கடவுள் திட்டமிட்டபொழுது, ஆபிரகாம் அந்த நகருக்காகப் பரிந்துப்பேசுகிறார். அப்போது பத்து நீதிமான்களின்பொருட்டு, அந்த நகரை அழிக்க மாட்டேன் என்கிறார். இதனுடைய பொருள் கடவுள் நம்பிக்கையோடு நேர்மையோடு வாழும் மனிதர்கள்பொருட்டு மற்றவர்களுக்கு வாழ்வு தருகிறார் என்பதே.

நாமும் நம்முடைய குடும்பத்திலே தீய வாழ்க்கை வாழுகின்றவர்களுக்காக, கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்காக மன்றாடும்போது, அவர்களின் வாழ்வும் நிச்சயம் மாறும். அவர்களும் இறையருளைப்பெற்றுக்கொள்வார்கள். அவர்களுக்காக நாம் தொடர்ந்து செபிப்போம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: