புனிதத்தில் வாழ

புனிதத்தில் வாழ
( சீராக்கின் ஞானம் 23 :1-6 )
தந்தையாகிய இறைவா!
என் வாழ்வின் தலைவரே
என் வாய் கூறுவதையெல்லாம்
பொருட்படுத்தாதேயும்.
அவற்றின் பொருட்டு நான் விழ்ச்சியுறாதவாறு செய்தருளும்.
என் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியருளும்.
இறுமாப்புள்ள பார்வைக்கு
நான் இடம் கொடாதிருக்கச் செய்தருளும்.
தீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றியருளும்.
தகாத விருப்பங்கள் எண்ணங்கள் ஆசைகள் என்னை மேற்க்கொள்ள விடாதேயும்.
உலக மதிப்பீடுகளுக்கு நான் அடிமையாகாமலும்
மனிதனின் பசப்பு வார்த்தைகளை நம்பாமலும்
தீய சூழ்நிலைகளுக்குள் வீழ்ந்து விடாமலும்
என்னைக் காத்தருளும்.
என்னை புனிதனாக்கவல்ல உமது தூய ஆவியானவர்
எப்பொழுதும் என்மீது அசைவாடி
என்னை வழி நடத்துவதை உணரச் செய்தருளும்
உமது மீட்பின் கரம்
எப்பொழுதும் என்னைத் தாங்கச் செய்தருளும்
உம்மையை அறியச் செய்தருளும்.
தந்தையே உமக்கே நான் சொந்தம்.
உம்மையே நான் நம்பி வாழ்கிறேன்.
எந்நாளும் எத்தகைய தீமைக்கும் அடிமையாகாதபடி
என்னைக் காத்தருளும்.
ஆமென்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: