போதனையும், சாதனையும் !

இருபத்தோராம் நூற்றாண்டின் மனிதர்கள் போதனைகளைவிட சாதனைகளுக்கும், அறிவுரைகளைவிட வாழ்க்கை அனுபவங்களுக்கும் அதிக அழுத்தம் தருகின்றனர் என்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தனது ”மீட்பரின் பணி” என்னும் திருமடலில். உண்மைதான், இந்த மனநிலை எல்லாக் காலத்து மனிதர்களுக்கும் இருக்கிறது. இயேசுவின் காலத்திலும், அவரது போதனைகளைக் கேட்ட மக்கள் வியந்தனர். காரணம் அவரது போதனை அதிகாரம் நிறைந்ததாக இருந்தது. அந்த அதிகாரத்தை இயேசுவின் செயல்களிலும் அவர்கள் கண்டனர். இயேசு தீய ஆவியிடம் “வாயை மூடு. இவரைவிட்டு வெளியே போ” என்று அதிகாரத்தோடு அதட்டி, வெளியேற்றினார். எனவேதான், மக்கள் திகைப்புற்று,” இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! என்று வியந்தனர்.

நமது சொற்கள் அதிகாரம் கொண்டதாக அமையவேண்டுமென்றால், நமது சொற்களுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாமல் இருக்கவேண்டும். நமது சொற்கள் நமது செயல்களில் எதிரொலிக்க வேண்டும்.

மன்றாடுவோம்: வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். ஆண்டவர் இயேசுவின் அதிகாரம் நிறைந்த போதனைக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய வாழ்விலும் நாங்கள் பேசுகின்ற வார்த்தைகளின்படி செயல்பட்டு, அதன்வழியாக அதிகாரம் நிறைந்து பேச அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: