மகிமையின் மறை உண்மைகள்

மகிமையின் மறை உண்மைகள்

                                          புதன்,ஞாயிறு
1) இயேசு புதுவாழ்விற்கு உயிர்த்தார்:
மருத்துவ தொழிலின் அங்கத்தினர் அனைவரும் மனித வாழ்வை காக்க அர்ப்பணீக்கப்பட்டவர்
என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டுமென்று வேண்டுவோம்.
2) தந்தையின் வலப்பக்கத்திற்கு உயர்த்துப் பெற்று நமக்காக பரிந்து பேசுகிறார்:
மனித வாழ்வின் மாண்பின் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொருவரும் திடப்படுத்தப்பட
வேண்டுமென மன்றாடுவோம்.
3) தெளிவுப்படுத்தி உறுதிப்படுத்தும் தூய ஆவியால் திருத்தூதர்கள் நிரப்பபடுதல்:
மனித மாண்பின் மேன்மைக்காக உழைப்பவர்கள் அனைவரும் தெளிவுப்படுத்தி உறுதிப்படுத்தும்
தூய ஆவியால் நிரப்பப்பட வேண்டுமாய் செபிப்போம்.
4)  பல இடங்களின் நடுவே தம் பொறுப்புகள் நிறைவு பெற்றவுடன் மரியாள் விண்ணகம் எடுத்துக்
கொள்ளப்பட்டவர்:
பெற்றோர்கள் தங்கள் பொறுப்புகளை ஒற்றுமையுடன் நிறைவேற்றி. தங்கள் பிள்ளைகள் மீது
உள்ள கடமைகளைப் பொறுப்புடன் செயல்படுத்த மன்றாடுவோம் .
5)   மரியாள் இயேசுவின் பாடுகளில் பங்கேற்று அவரின் அரசுரிமையிலும் பங்கேற்றவலாய் முடி
சூட்டப்பெற்றால்:
நாம் அனைவரும் இயேசுவின் பாடுகளில் முழுமனதோடு பங்கேற்று அவரின் மாட்சியில்
பங்குபெறவும் அவரோடு நித்தியத்திற்கும் வாழும் மாட்சிமை பெறவும் வேண்டுவோம்.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: