மிகவும் முக்கியமான நபராக(VIP) நீங்கள் மாறலாம்…

மத்தேயு 13:10-17

நாம் அனைவரும் நன்கு அறிந்தபடி, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உவமைகள் வாயிலாக போதித்தார். அவர் போதனைகள் அனைத்தும் நம்மை செதுக்கி சீராக்கி நல்வாழ்விற்கு இட்டுச்செல்ல. நம் உடலில் அழுக்குகள், ஆபத்துக்கள் வந்து சேராமல் அணை போட வேண்டும் என்பதற்காக. மிகவும் குறிப்பாக நம் உடலிலுள்ள மூன்று உறுப்புகளில் அழுக்குகள் வந்து சேராமல் நாம் கருத்தாய் கவனமாய் இருந்தோம் என்றால் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆர்ப்ரிப்பு, ஆனந்தம் வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கும். மிகவும் முக்கியமான நபராக(VIP) நாம் மாறலாம்.

கண், காது மற்றும் இதயம் இந்த மூன்றையும் பயன்படுத்தி மிகவும் முக்கியமான மனிதராக நாம் மாறலாம். ஒவ்வொன்றின் படைப்பின் முக்கிய அர்த்தத்தை உணர்ந்து பயன்படுத்தினால் அதன் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும்.

1. ஆற்றல் நிறைந்த கண்கள்
கண்களைக் கொண்டு புத்தகங்கள் வாசித்து நல்ல அறிவாளியாக, அறிஞராக மாறலாம். நல்லதைப் பார்த்து கவிதை எழுதி கவிஞராக உருவாகலாம். இன்னும் கண்களின் ஆற்றலினால் பலவற்றை நாம் செய்யலாம்.

2. அருள் நிறைந்த காதுகள்
காதுகளைக் கொண்டு நல்லவற்றைக் கேட்டு நாம் சிறந்த இசையமைப்பாளராக வலம் வரலாம். காதுகளைக் கொண்டு பிறருடைய பிரச்சினைக் கேட்டு தீர்க்கும் ஆலோசகராக மாறலாம். இன்னும் அருள் நிறைந்த காதுகளினால் பலவற்றை நாம் படைக்கலாம்.

3. ஆசீர்வதிக்கப்பட்ட இதயம்
கடவுள் நமக்கு தந்த இதயத்தில் நல்லவைகளை நிரப்பி நாம் ஒரு மாமனிதராக திகழலாம். நல்ல புண்ணியங்களை வாழ்ந்துக் காட்டும் ஒரு சிறந்த புனிதராகவும் மாறலாம். இதயம் எப்பொழுதும் நல்லவற்றை செய்ய நமக்கு நம்பிக்கையூட்டும்.

மனதில் கேட்க…
• மிகவும் முக்கியமான நபராக(VIP) மாற நான் முயற்சி எடுக்கலாமா?
• கண், காது, இதயம் இவற்றை கொண்டு ஆக்கப்பூர்வமான பலவற்றை செய்யலாமே?

மனதில் பதிக்க…
இன்றும் என்றும் வாழ்விலும் சாவிலும் முழுத்துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப் படுத்துவேன். இதுவே என் பேராவல். இதுவே என் எதிர்நோக்கு (பிலி 1:20)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: