முன்னோடியின் பணிகள் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25) செக்கரியாவுக்குக் காட்சி தரும் வானதூதர் அவருக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையான திருமுழுக்கு யோவானைப் பற்றி முன்னுரைப்பதை வாசிக்கிறோம். இந்த அறிவிப்பில் இயேசுவின் முன்னோடியான யோவானின் பண்புகளை வானதுhதர் வரிசைப்படுத்துகிறார்.

(1) அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.
(2) அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்.
(3) மது அருந்த மாட்டார்.
(4) துhய ஆவியால் ஆட்கொள்ளப்படுவார்.
(5) மக்களை ஆண்டவரிடம் திரும்பி வரச்செய்வார்.
(6) துணிவும் ஆற்றலும் மிக்கவராய் இருப்பார்.
(7) மக்களிடையே ஒப்புரவை உருவாக்குவார்.
(8) நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச்செய்வார்.
(9) இவ்வாறு, ஆண்டவருக்கு ஏற்புடைய மக்களை ஆயத்தம் செய்வார்.

இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில், இந்த வருகையின் காலத்தில், நாமும் இயேசுவின் முன்னோடிகளாக, ஆண்டவரின் வருகைக்குப் பிறரை ஆயத்தம் செய்பவர்களாக மாற்ற வேண்டாமா? எனவே, நாமும் இந்த ஒன்பது வகையான வழிகளில் மக்களை ஆயத்தம் செய்வோம். மது அருந்தாமல், தீயவற்றை நாடாமல், அதே வேளையில், தூய ஆவியின் கொடைகளை, கனிகளைப் பெற்றவர்களாய், மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குபவர்களாய் வாழ்வோமா! அப்போது நாமும் இயேசுவின் முன்னோடிகளாய் மாறுவோம்.

மன்றாடுவோம்: அன்பின் தெய்வமே இறைவா, இயேசுவைப் பிறருக்கு அறிவிக்கும முன்னோடியாக புனித திருமுழுக்கு யோவானைத் தேர்ந்தெடுத்து, அவருக்குரிய பணிகளை வரையறுத்து, அதற்கேற்ற ஞானத்தையும் ஆற்றலையும் அவருக்கு அளித்தீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் இயேசுவின் முன்னோடிகளாக வாழ, எங்களுக்கும் உமது ஆவியின் ஆற்றலைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: