யார் விருப்பம் !

இயேசுவிடம் இருந்த கொள்கைத் தெளிவு நம்மிடம் இருப்பதாக. இயேசு தன்னுடைய வாழ்வும், பணியும் எத்தகையது என்பதை நன்றாகப் புரிந்துவைத்திருந்தார். “என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்” என்று தெளிவாகச் சொன்னார்.

நாம் யார் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்கிறோம்? நமது சொந்த விருப்பத்தையா, அல்லது இறைவனின் விருப்பத்தையா? நமது விருப்பத்தை நிறைவேற்ற உழைத்தால், நமக்கு ஏமாற்றமும், தோல்வியுமே கிட்டும். ஆனால், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பி உழைத்தால், இறுதி வெற்றி, இறுதி மன நிறைவும் நிச்சயமாக நமக்குக் கிடைக்கும். இதை மறக்க வேண்டாம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உமது அன்புத் திருமகன் இயேசுவுக்காக நன்றி கூறுகிறோம். அவர் தமது சொந்த விருப்பத்தின்படி வாழாமல், உமது விருப்பத்தின்படி வாழ்ந்து எங்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார். அவரைப் பின்பற்றி நாங்களும் உமது விருப்பத்தின்படி வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருட்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: