வெளிவேடம் தவிர்ப்போம்!

இறைவேண்டல், தர்மம் செய்தல் போன்ற அன்பு, அறப் பணிகள், நோன்பிருத்தல்… இவை மூன்றும் அனைத்து சமயங்களிலும் முதன்மை பெற்ற ஆன்மீகச் செயல்பாடுகளாக அமைந்திருக்கின்றன. ஆண்டவர் இயேசுவும் தம் சீடர்களிடமும், தம்மைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்திடமும் இவற்றை வலியுறுத்துகிறார்.

ஆனால், முகாமையான ஒரு வன்கட்டோடு, அதாவது நிபந்தனையோடு… வேண்டுதல், தர்மம், நோன்பு – மூன்றும் வெளிவேடமின்றி நிகழவேண்டும். பிறர் பார்க்க வேண்டும், பிறரின் பாராட்டைப் பெறவேண்டும், நல்ல பெயர் வாங்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இவற்றைச் செய்யும்போது, அங்கே வெளிவேடம் புகுந்துவிடுகிறது. உள்நோக்கம் நுழைந்துவிடுகிறது. பாராட்டும், நற்பெயரும் கிடைக்கும்போது, உள்நோக்கம் நிறைவேறிவிடுகிறது. எனவே, இறையாசி தவறிவிடுகிறது.

எனவே, இவை மூன்றையும் மறைவாக, பிறருக்குத் தெரியாமல், இறைவனுக்கு மட்டுமே உணர்கின்ற வகையில் ஆற்றுவோம். இறைவனின் பாராட்டை, ஆசிகளைப் பரிசாகப் பெறுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். வெளிவேடமற்ற, உள்நோக்கமற்ற நேர்மையான உள்ளத்தை எங்களுக்குத் தாரும். எங்கள் செபம், செயல், ஆன்மீகம் அனைத்தும் உமக்கு மட்டுமே புகழ் தரும் செயல்களாக அமைவனவாக, ஆமென்.

~ அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: