அரசியல்வாதி பரிசேயன்

லூக் 18: 9-14

மக்களின் பணத்தினைப் பறித்து, காசினைக் கரியாக்கி, மக்களை ஏமாற்றி அவர்களின் மானத்தையும் மரியாதையையும் அடகு வைத்து ‘இலவசம்’ என்ற பெயரில் சில பொருட்களைக் கொடுத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி உங்களுக்கு நான் அதைச் செய்தேன், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன், இதைக் கொண்டுவர வலியுறுத்துவேன் என்று மக்களை மையப்படுத்தாமல், தன்னையும் தனது குடும்பத்தையும் மையப்படுத்திப் பேசுகிற இன்றைய அரசியல்வாதிகளைப் போலவே நற்செய்தியில் வரும் பரிசேயனும் பேசுகிறான். இப்பரிசேயன் தான் சிறந்தவன், நல்லவன் என்பதைக் கூற செபத்தைக் கையாளுகிறான். இறைவனை மையப்படுத்துகிற செபத்தை, அவனை மையப்படுத்தி மாற்றியமைக்கிறான் (இதுவும் ஒரு வித சிலை வழிபாடே) தன்னை மேம்பட்டவன் என்று காட்ட மற்றவர்களை இகழ்கிறான். மொத்தத்தில் இப்பரிசேயன் தன்னிலன்பு, இறையன்பு, பிறரன்பு ஆகிய மூன்றிற்கும் எதிராகச் செயல்படுகிறான்.

இந்த மூன்றையும் நாம் வலுப்படுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டிருப்பதே இத்தவக்காலம். இதை மீண்டும் மீண்டும் உணர்ந்தவர்களாய் மாறி நம் அகந்தையை அகற்றி தாழ்ச்சியைக் கையிலெடுத்து நம்மை முழுமையாக அவரிடம் ஒப்படைப்போம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.